பாகுபலி 1&2 ஆகிய  திரைப்படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து பிரம்மாண்ட படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த RRR திரைப்படம் பல கோடி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ள RRR படத்தில் ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்திய அளவில் பிளாக்பஸ்டர் ஹாட்டானதோடு 1100 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வசூல் சாதனை படைத்த RRR திரைப்படம் சமீபத்தில் ஜப்பானிலும் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விமர்சன ரீதியாகவும் அனைவரும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது அந்த வகையில் அடுத்து நடைபெறவிருக்கும் ஆஸ்கார் விருதுகளில் அனைத்து பிரிவுகளிலும் RRR திரைப்படத்தை படக்குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். மேலும் கோல்டன் குளோப் விருதுகளிலும் சிறந்த திரைப்படத்திற்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஆஸ்கார் விருதுகளுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் RRR திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய திரை வரலாற்றிலேயே முதல் பாடலாக ஆஸ்கார் விருதுகளின் இறுதி பட்டியலில் நாட்டு நாட்டு பாடல் இடம் பிடித்ததால் கட்டாயமாக விருது வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.