தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் 2வது பாகமும் தயாராக உள்ளது.

இதனிடையே கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பத்து தல. பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் பத்து தல திரைப்படத்தில், முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்தை கடந்த டிசம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையாத நிலையில் ரிலீஸ் தள்ளிப்போனது. 

இதனையடுத்து அடுத்த ஆண்டு(2023) மார்ச் மாதத்தில் பத்து தல படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், “பத்து தல படத்துடன் புத்தாண்டை கொண்டாட தயாரா?” என குறிப்பிட்டு நாளை டிசம்பர் 31ஆம் தேதி பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…