2023 உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்வதற்கு ஈஷா சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது டிப்ஸ்களை கொடுத்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சத்குரு அவர்களிடம், "இந்திய கிரிகெட் அணி உலக கோப்பையை வெல்வதற்கு ஏதாவது டிப்ஸ் கொடுங்கள்" என ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பதில் அளித்த சத்குரு, “இந்திய கிரிக்கெட் அணிக்கு கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டும் என்று தெரியும் என நினைக்கிறேன். இதில் நான் ஏன் எதுவும் சொல்ல வேண்டும். ஆனால் இப்போது எப்படி கோப்பையை வெல்வது..? கோப்பையை வெல்ல முயற்சிக்காதீர்கள். பந்தை மட்டும் சிறப்பாக அடிக்க முயற்சி செய்யுங்கள். இந்த 100 கோடி மக்களும் கோப்பைக்காக ஆசைப்படுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் பந்தைத் தவறவிடுவீர்கள். அல்லது நீங்கள் உலகக் கோப்பையை வென்றால் மற்ற எல்லா கற்பனையான விஷயங்களையும் நீங்கள் நினைத்தால் நடக்கும். ஆனால் பந்து உங்கள் விக்கெட்டுகளை வீழ்த்தும். எனவே உலகக் கோப்பையை எப்படி வெல்வது? அதை பற்றி நினைக்காதீர்கள்.. பந்தை எப்படி அடிப்பது.. எதிரணி விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துவது.. நீங்கள் சிந்திக்க வேண்டியது அவ்வளவுதான். உலகக் கோப்பையைப் பற்றி யோசிக்க வேண்டாம், பிறகு நீங்கள் உலகக் கோப்பையை முறியடிப்பீர்கள்” என பேசி இருக்கிறார். அந்த வீடியோ இதோ…

 

உலகக்கோப்பை வரலாற்றிலேயே இந்திய அணிக்கு இந்த முறை உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட கடந்த 2003ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எப்படி ஒரு ஆட்டம் கூட தோல்வியே காணாமல் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றியதோ அதேபோன்று தற்போது இந்திய அணி இறுதிப்போட்டி வரை எந்த போட்டியிலும் தோல்வியை காணாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2003 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்த இந்தியா 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே ஆஸ்திரேலியா அணியுடன் இறுதிப்போட்டியில் சந்திக்கிறது. இதுவரை நடந்த 9 லீக் போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடி வெற்றியை கைப்பற்றிய இந்திய அணி நேற்று முன் தினம் நவம்பர் 15ஆம் தேதி நடந்து முடிந்த அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் வெற்றி பெற்றது. மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்த போதும் இந்திய அணிக்கு போட்டி மிகவும் சவாலானதாகவே இருந்தது. சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்து வந்த நிலையில் முகமது ஷமியின் துல்லியமான பந்துவீச்சு இந்திய அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. எப்போதுமே பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணி தற்போது அசுரபலம் வாய்ந்த இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது. 2011 ஆம் ஆண்டு MSதோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக கோப்பையை வென்றது மிகப்பெரிய வரலாற்று சாதனையாக இன்று வரை பேசப்படுகிறது இனிமேலும் பேசப்படும். அதன் பிறகு வேறு எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த உலக கோப்பையை வென்று ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வெற்றியை பரிசளிக்கும் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.