தொடர்ந்து அட்டகாசமான நகைச்சுவை திரைப்படங்களாக ரசிகர்களுக்கு விருந்து வைத்து வரும் நடிகர் சந்தானத்தின் அடுத்த நகைச்சுவை விருந்தாக வரவிருக்கும் 80'S பில்டப் திரைப்படத்திலிருந்து ஒட்டி வாரேனே என்ற கலக்கலான பாடல் தற்போது வெளிவந்துள்ளது. அழகிய ரொமான்டிக் மெலடி பாடலாக வெளிவந்திருக்கும் இந்த ஒட்டி வாரேனே பாடலை முத்தமிழ் எழுதி இருக்கிறார். ஜிப்ரான் இசையில் முன்னணி பின்னணி பாடகர் எஸ்பி.சரண் அவர்கள் இந்த பாடலை பாடியிருக்கிறார். 80-களின் காலகட்டத்தில் நடக்கும் நகைச்சுவை படமாக வெளிவர இருக்கும் இந்த 80'S பில்டப் திரைப்படத்தில் இருந்து 80-களின் விண்டேஜ் ஸ்டைலில் வந்திருக்கும் அந்த ஒட்டி வாரேனே லிரிக் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக நகைச்சுவை மையப்படுத்திய திரைப்படங்களில் தொடர்ச்சியாக கதையின் நாயகனாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்திலிருந்து கதாநாயகனாக தனது புதிய பாதையை தொடங்கிய நடிகர் சந்தானம் தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, A1, டக்கால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குளுகுளு மற்றும் ஏஜென்ட் கண்ணாயிரம் என வரிசையாக கலக்கலான படங்களை கொடுத்து வருகிறார். இந்த வரிசையில் இந்த 2023 ஆண்டில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் பக்கா ஹாரர் காமெடி ட்ரீட்டாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளிவந்த கிக் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த வரிசையில் பிரபுதேவாவின் குலேபகாவலி, ஜோதிகாவின் ஜாக்பாட் மற்றும் காஜல் அகர்வாலின் கோஸ்டி உள்ளிட்ட என்டர்டெய்னிங் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் S.கல்யாண் இயக்கத்தில் முதல்முறையாக நடிகர் சந்தானம் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் 80’S பில்டப். சந்தானம் உடன் இணைந்து ராதிகா ப்ரீத்தி கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த 80’S பில்டப் திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, மன்சூர் அலிகான், டைகர் தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜேக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவில் MS.பாரதி படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த பில்டப் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சமீபத்தில் சந்தானத்தின் 80's பில்டப் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் கலாய் என்ற பெயரில் வந்த ஃபர்ஸ்ட் லுக் வீடியோ ரசிகர்கள் இடையே பெரும் ஆர்வத்தை தூண்டிய நிலையில் ஊரில் தினங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

வித்தியாசமான ரெட்ரோ காமெடி படமாக தயாராகி இருக்கும் இந்த 80's பில்டப் படமும் சந்தானத்திற்கு மற்றொரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற நவம்பர் 23ஆம் தேதி 80’S பில்டப் திரைப்படம் உலகம் முழுக்க மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக பட குழுவினர் அறிவித்துள்ளனர். அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் N.ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள புதிய படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.