நயன்தாரா பிறந்தநாள் ஸ்பெஷல்: லேடி சூப்பர் ஸ்டாரின் 75 வது படமாக வரும் அன்னபூரணி படத்தின் முதல் பாடல் லிரிக் வீடியோ இதோ!

நயன்தாராவின் அன்னபூரணி பட உலகை வெல்ல போகிறாள் பாடல் வெளியீடு,nayanthara in annapoorani movie ulagai vella pogiraal out now | Galatta

நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது திரை பயணத்தில் 75வது திரைப்படமாக நடித்திருக்கும் அன்னப்பூரணி திரைப்படத்தின் முதல் பாடலாக உலகை வெல்லப் போகிறாள் பாடல் வெளியானது. அன்னபூரணி The Goddess of Food என வெளிவர இருக்கும் இந்த படத்தின் முதல் பாடலாக தற்போது வந்திருக்கும் இந்த உலகை வெல்லப்போகிறாள் பாடலை இசையமைப்பாளர் தமிழ் இசையில் ஹரிணி பாடி இருக்கிறார் பாடல் ஆசிரியர் விவேக் இந்த பாடலை எழுதியிருக்கிறார். நயன்தாராவின் பிறந்தநாள் பரிசாக வெளிவந்த அன்னபூரணி படத்தின் உலகை வெல்லப் போகிறாள் பாடல் இதோ...

 

இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை நயன்தாரா நேற்று நவம்பர் 18ஆம் தேதி தனது 39 வது பிறந்த நாளை கொண்டாடினார். "லேடி சூப்பர் ஸ்டார்"-ஆக திகழும் நடிகை நயன்தாராவுக்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியிருக்கும் இந்த அன்னப்பூரணி திரைப்படத்தில் நடிகை ஜெய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், கார்த்திக் குமார், அச்சுத் குமார், குமாரி சச்சு, பூர்ணிமா ரவி, ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

கைதி & மாஸ்டர் படங்களின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்யும் அன்னப்பூரணி திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். நயன்தாராவின் திரைப் பயணத்திலேயே பிரம்மாண்டமான படைப்பாக  உருவாகி இருக்கும் அன்னப்பூரணி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வருகிற டிசம்பர் மாதம் 1ம் தேதி அன்னபூரணி திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த அன்னபூரணி திரைப்படத்தின் முதல் GLIMPSE ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெகு விரைவில் டீசர், ட்ரெய்லர் மற்றும் மற்ற பாடல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த 2023 ஆம் ஆண்டில் இதுவரை பாலிவட்டில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த வெளிவந்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டான ஜமான் மற்றும் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த திரில்லர் படமான இறைவன் ஆகிய படங்களில் நடித்த நடிகை நயன்தாரா அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக தற்போது தமிழில் டெஸ்ட் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சசிகாந்த் அவர்கள் முதன்முறை இயக்குனராக களமிறங்கும் டெஸ்ட் திரைப்படத்தில் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோரோடு இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் மண்ணாங்கட்டி Since 1960 எனும் திரைப்படத்திலும் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இது போக மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் இயக்குனரான இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் ராம் பார்ட் 2 படத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.