'எவன்' பட ஹீரோ திலீபன் புகழேந்தி & அதுல்யா பாலக்கல் ஜோடி ரசிகர்களுடன் பகிர்ந்த ஸ்வீட்டான செய்தி... குவியும் வாழ்த்துகள்!

திலீபன் புகழேந்தி அதுல்யா பாலக்கல் தங்களது கர்ப்பத்தை அறிவித்தது,dhileepan pugazhendhi and wife athulya palakkal announce their pregnancy | Galatta

“எவன்” திரைப்படத்தின் கதாநாயகன் திலீபன் புகழேந்தி மற்றும் அவரது மனைவி அதுல்யா பாலக்கல் ஜோடி தங்களது கர்ப்பத்தை அறிவித்துள்ளனர். கடந்த நவம்பர் 16ஆம் தேதி தங்களது சமூக வலைதள பக்கங்களில் விரைவில் தங்களுக்கு குழந்தை பிறக்க இருப்பதாக திலீபன் புகழேந்தி & அதுல்யா பாலக்கல் ஜோடி தெரிவித்துள்ளது. கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் டெஸ்ட் கிட்டின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நடிகர் திலீபன் புகழேந்தி தற்போது அவரது மனைவி அதுல்யா பாலக்கல் கர்ப்பமாக இருப்பதாகவும் வருகிற 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அவர்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், "எனவே இதை உலகுக்கு வெளிப்படுத்த இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்... ஆம், நானும் மனைவி அதுல்யா திலீபனும் பிப்ரவரியில் எங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறோம் உங்கள் அனைவரது ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறோம்." என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். அந்த பதிவு இதோ… 

 

 

View this post on Instagram

A post shared by Dhileepan (@dhileepan__pugazhendhi)

மேலும் அதுல்யா பாலக்கல் அவர்களுக்கு ஆறாவது மாதத்தில் எடுக்கப்பட்ட ஸ்கேனிங் புகைப்படத்தையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் திலீபன் புகழேந்தி அவர்கள், “இது ஆறாவது மாதம் எங்களது குழந்தையை கையில் ஏந்துவதற்கு பிப்ரவரி மாதம் வரை காத்திருக்க முடியவில்லை” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ… 

 

View this post on Instagram

A post shared by Dhileepan (@dhileepan__pugazhendhi)

எவன் திரைப்படத்தின் கதாநாயகனான திலீபன் புகழேந்தி அவர்கள் தமிழ்நாட்டின் மிக முக்கிய தமிழ் கவிஞரும் திரைப்பட பாடல் ஆசிரியருமான புலமை பித்தன் அவர்களின் பேரன் ஆவார். பைக் ரேஸராக தனது பயணத்தை தொடங்கிய திலீபன் புகழேந்தி எவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குனர் துரைமுருகன் இயக்கத்தில் திலீபன் புகழேந்தி நடித்த எவன் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ச்சியாக அதிரடியான திரைப்படங்களில் திலீபன் புகழேந்தி நடித்து வருகிறார். தனது கனவு படைப்பாக நீண்ட காலமாக தானே எழுதிய சாகாவரம் எனும் திரைப்படத்தை தானே இயக்கி கதையின் நாயகனாகவும் திலீபன் புகழேந்தி நடித்திருக்கிறார். சாகாவரம் திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்ந்து ஆண்டனி எனும் புதிய திரைப்படத்திலும் திலீபன் புகழேந்தி கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த ஆண்டனி திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருக்கின்றன. இதர அறிவிப்புகளும் வரும் நாட்களில் வெளிவரும் என தெரிகிறது. இந்த நிலையில் தற்போது திலீபன் புகழேந்தி வருகிற பிப்ரவரி மாதத்தில் தனக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதாக அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களும் பிரபலங்களும் திலீபன் புகழேந்தி மற்றும் அவரது மனைவி அதுல்யா இருவருக்கும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.