'லியோ'வில் உடன் நடித்த த்ரிஷா பற்றி அவதூறாக பேசிய மன்சூர் அலிகான் மீது IPC பிரிவு 509... காவல்துறையை நாடிய தேசிய மகளிர் ஆணையம்!

த்ரிஷா பற்றி பேசிய மன்சூர் அலிகான் மீது IPC பிரிவு 509 NCW,ncw directs police to ipc section 509b against mansoor ali khan trisha | Galatta

லியோ திரைப்படத்தில் உடன் நடித்த திரிஷா பற்றி அவதூறாக பேசிய மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509B கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறையை தேசிய மகளிர் ஆணையம் நாடி இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷாவுடன் லியோ திரைப்படத்தில் பணியாற்றியது பற்றி பேசும்போது மிகவும் மோசமான முறையில் கதாநாயகிகள், படுக்கை அறை காட்சிகள், பலாத்கார காட்சிகள் பற்றி பேசியது, ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து தானாக முன்வந்த தேசிய மகளிர் ஆணையம் நடிகை திரிஷாவுக்கு ஆதரவு குரல் கொடுக்கும் வகையில், இது தொடர்பாக மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 மற்றும் அது சம்பந்தப்பட்ட பிற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல்துறையை நாடி உள்ளனர். இது குறித்து தங்களது X பக்கத்தில்,
“நடிகை த்ரிஷாவை பற்றி நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் தானாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களைப் பயன்படுத்துமாறு டிஜிபிக்கு வேண்டுகோள் விடுகிறோம். இது போன்ற கருத்துக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக்குகிறது மற்றும் கண்டிக்கப்பட வேண்டும்.” 
என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த பதிவு இதோ…

 

The National Commission for Women is deeply concerned about the derogatory remarks made by actor Mansoor Ali Khan towards actress Trisha Krishna. We're taking suo motu in this matter directing the DGP to invoke IPC Section 509 B and other relevant laws.Such remarks normalize…

— NCW (@NCWIndia) November 20, 2023

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகராக வலம் வரும் மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா மற்றும் தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகள் குறித்து மிகவும் அவதூறாக பேசியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக அது குறித்து நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கங்களில் இந்த விஷயத்தை குறிப்பிட்டு, “சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. அந்த பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், மரியாதைக் குறைவானதாகவும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருந்தது. என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. அவரைப் போன்றவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே இழுக்கு!”  என தெரிவித்திருந்தார்.

A recent video has come to my notice where Mr.Mansoor Ali Khan has spoken about me in a vile and disgusting manner.I strongly condemn this and find it sexist,disrespectful,misogynistic,repulsive and in bad taste.He can keep wishing but I am grateful never to have shared screen…

— Trish (@trishtrashers) November 18, 2023

முன்னதாக இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் நடிகை குஷ்பு அவர்கள் தனது பக்கத்தில், 
“தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான நான், மன்சூர் அலி கான் விவகாரத்தை ஏற்கனவே என் சீனியரிடம் எடுத்துரைத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செத்துவிட்டேன். இப்படிப்பட்ட அசுத்தமான மனதை கொண்டவரை யாரும் விட்டுவிட முடியாது. திரிஷா உடன் நான் நிற்கிறேன். மேலும் எனது மற்ற சகாக்களைப் பற்றி, நான் உட்பட, அவர்களைப் பற்றி இந்த மனிதன் (மன்சூர் அலி கான்) மிகவும் கேவலமான மனநிலையில் பேசுகிறான். பெண்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்குக் கண்ணியத்தைக் கொண்டுவரவும் நாம் பல் & நகத்துடன் போராடும்போது, ​​அத்தகைய ஆண்கள் நம் சமூகத்தில் ஒரு BOT போன்றவர்கள்.”
என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

As a member of NCW, I have already taken up the issue of Mansoor Ali khan with my senior and will be taking an action on it. Nobody can get away with such a filthy mind. I stand with @trishtrashers and my other colleagues where this man speaks in such a sexist disgusting mindset…

— KhushbuSundar (@khushsundar) November 19, 2023