அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராகவும் இந்திய திரையுலகின் ஈடு இணையற்ற உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் முக்கியமான கௌரவ வேடத்தில் நடிக்கிறார். 

முன்னதாக தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் படையப்பா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள நடிகர் விநாயகன் உட்பட பலர் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு தனது மனைவி மற்றும் மகளுடன் வந்த நடிகர் ரோபோ சங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்தார்.

நடிகர் ரோபோ சங்கர் இன்று தனது 22 ஆவது திருமண நாளை கொண்டாடுகிறார். எனவே தனது மனைவி பிரியங்கா மற்றும் மகள் இந்திரஜாவுடன் யிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து திருமண நாளுக்கு ஆசி பெற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை ரோபோ சங்கர் சந்தித்த இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…