இந்த தீபாவளியை மக்கள் கொண்டாடும் வகையில் நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படமாக கடந்த நவம்பர் 10ஆம் தேதி வெளிவந்த ஜப்பான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆரம்பம் முதலே கார்த்தியின் லுக்கிலிருந்து ஒவ்வொரு விஷயங்களும் ஜப்பான் படத்தின் மீது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில் ரிலீசுக்கு முன்பு வெளிவந்த ட்ரெய்லர் ஜப்பான் திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தன. தமிழ்நாட்டில் ஒரு புகழ்பெற்ற நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்தே கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் உருவாகி இருப்பதாகவும் அந்த கொள்ளை சம்பவத்தை நடத்திய கொள்ளையன் கதாபாத்திரத்திலேயே கார்த்தி நடித்திருப்பதாகவும் நிறைய விஷயங்கள் பகிரப்பட்டன.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரசியாக பேட்டி கொடுத்த ஜப்பான் படத்தின் இயக்குனர் திரு.ராஜு முருகன் அவர்கள் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், "ட்ரெய்ரில் பார்க்கும்போது ஒரு விஷயம் தெரிந்தது. இது ஒரு குறிப்பிட்ட நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது. அதைத்தான் பெரிதாக ஒரு படமாக எடுத்திருப்பது போல் பேசப்படுகிறது அது உண்மையா?" என கேட்டபோது, “இல்லை நிச்சயமாக அப்படி இல்லை இது முழுக்க முழுக்க கற்பனை தான் ஆனால் அங்கங்கே பார்த்த சில விஷயங்கள் இருக்கும். அது என்னுடைய எல்லா கதைகளிலுமே இருக்கும். அங்கங்கே பார்த்த விஷயங்கள் கதைகளில் இருக்குமே தவிர அதன் தொகுப்புகள் இருக்குமே தவிர முழுக்க முழுக்க இது ஒரு கற்பனை கதை தான்.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட ஜப்பான் மரத்தின் இயக்குனர் ராஜு முருகன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களையும் பலவிதமான கதை களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக வெளிவந்திருக்கும் ஜப்பான் திரைப்படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் முதல்முறையாக கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வாகை சந்திரசேகர் மற்றும் பவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இயக்குனர் ராஜமுருகன் அவர்களின் வழக்கமான படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் களத்தில் முற்றிலும் மாறுபட்ட புதிய அவதாரத்தில் ஜப்பான் கதாபாத்திரத்தில் கலக்கும் கார்த்தியின் பக்கா மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக இந்த தீபாவளிக்கு ரிலீசாகி இருக்கும் இந்த ஜப்பான் திரைப்படத்தை இந்த தீபாவளி விடுமுறைகளில் குடும்பங்களோடு திரையரங்குகளில் மக்கள் ரசித்து வருகின்றனர்.