இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசை அமைப்பாளராக ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த ஆஸ்கார் தமிழன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக புது அவதாரம் எடுத்து தயாரித்து எழுதிய 99 சாங்ஸ் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தொடர்ந்து தற்போது இயக்குனராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில் பிரம்மிப்பான திரைப்படமாக தயாராகி இருக்கிறது லே மஸ்க். ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா உடன் இணைந்து இப்படத்தின் கதை திரைக்கதை எழுதியுள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால் லே மஸ்க் திரைப்படம் ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி திரைப்படம். 

36 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தை ரோமின் வெவ்வேறு பகுதிகளில் 13 நாட்களில் 24 கேமராக்களில் படமாக்கி இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். நோரா அர்னேஸிடர் என்னும் பிரெஞ்சு நடிகை கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் கை பரனட் எனும் பிரிட்டிஷ் நடிகர் நடித்துள்ளார். ஜியான்னி ஜியாநெல்லி ஒளிப்பதிவில், லிவோ சான்ஸெச் மற்றும் ஆனந்த் கிஷோர் படத்துக்கு செய்துள்ள லே மஸ்க் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட லே மஸ்க் திரைப்படத்தை கண்டு ரசித்த அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானின் மெதுவாக பாராட்டியுள்ளனர். இதனிடையே சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லே மஸ்க் திரைப்படத்தை பார்த்தார். ரசித்து பார்த்து வியந்த ரஜினிகாந்த் புகழ்ந்து பாராட்டிய வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ…