நடன கலைஞராக தனது பயணத்தை தொடங்கி மக்கள் விரும்பும் நடன இயக்குனராக உயர்ந்த ராகவா லாரன்ஸ் தொடர்ந்து நடிகராகவும் இயக்குனராகவும் வெற்றிக்கொடி நாட்டினார். தமிழில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலேயே குறிப்பிடப்படும் கமர்சியல் ஹீரோவாகவும் இயக்குனராகவும் ராகவா லாரன்ஸ் நடித்த திரைப்படங்களும் இயக்கிய திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின.

குறிப்பாக முனி திரைப்படத்திலிருந்து தனது ஹாரர் காமெடி சீரிஸை கையில் எடுத்த ராகவா லாரன்ஸ் தொடர்ந்து இயக்கிய காஞ்சனா திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து வரிசையாக காஞ்சனா 2 மற்றும் 3 ஆகிய பாகங்களும் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகின. மேலும் காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்காக அக்ஷய் குமார் நடித்த LAXMI திரைப்படத்தையும் ராகவா லாரன்ஸ் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் அடுத்ததாக காஞ்சனா திரைப்படத்தில் நான்காவது பாகமாக லாரன்ஸ் நடிக்கும் துர்கா திரைப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் தயாரிப்பிலும் திரைக்கதையிலும், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் அதிகாரம் திரைப்படத்தில் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இயக்குனர் P.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் தற்போது லாரன்ஸ் நடித்து வருகிறார்.

அதேபோல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து பெரும் வெற்றி பெற்ற ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக சமீபத்தில் தொடங்கப்பட்ட ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் SJ.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த வரிசையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகியுள்ள திரைப்படம் ருத்ரன்.

இயக்குனர் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் வெளிவந்து ஹிட்டடித்த பொல்லாதவன் மற்றும் ஆடுகளம், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா, அருள்நிதியின் டைரி உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த FIVE STAR CREATIONS LLP நிறுவனத்தின் தயாரிப்பாளர் S.கதிரேசன் இயக்குனராக களமிறங்கி இருக்கும் ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமிழ் புத்தாண்டு வெளியீடாக வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ருத்ரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

ருத்ரன் திரைப்படத்திற்கு RD.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முன்னதாக ருத்ரன் திரைப்படத்தின் முதல் பாடலாக வெளிவரும் பாடல், ஒரு சூப்பர் ஹிட் தமிழ் பாடலின் ரீமேக் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையில் புகழ்பெற்ற இயக்குனர் A.C.திரில்லோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்த வீரத்திருமகன் படத்தில் இடம் பெற்ற “பாடாத பாட்டெல்லாம்” என்ற காலத்தால் அழியாத ரம்யமான பாடலின் ரீமேக்காக ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படத்தில் “பாடாத பாட்டெல்லாம்” பாடல் தயாராகி இருக்கிறது. இந்த பாடாத பாட்டெல்லாம் ரீமேக் பாடல் நாளை பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது அந்த பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது. செம்ம ஸ்டைலான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…