உலகின் ஒட்டுமொத்த திரைகலைஞர்களால் உலகின் உயரிய விருது என்ற அனுசரிக்கப்படும் ஆஸ்கர் விருது விழா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட விருது விழாவில் உலகிலிருந்து பல மொழி திரைப்படங்கள் பங்கேற்றனர். அதில் ஆஸ்கர் குழும உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு சிறந்த கலை படைப்புகளுக்கு விருது வழங்கினார்கள். இந்த விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்தியாவில் இருந்து இந்திய திரைப்படங்களான இயக்குனர் ராஜமௌளியின் ஆர் ஆர் ஆர் திரைப்படம் சிறந்த பாடல்களுக்கான விருது பட்டியிலில் இடம் பெற்று விருதினை வென்றது. இந்த விருதினை இசையமைப்பாளர் கீரவாணியுடன் பாடலாசிரியர் சந்திரப்போஸ் பெற்று கொண்டனர். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த இந்திய திரை ரசிகர்களாலும் பிரபலங்களினாலும் கொண்டாடப் பட்டது அதே விருது விழாவில் சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதினை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ குறும்படம் பெற்றது.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் வசித்து வரும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதிக்கும் ரகு , அம்மு என்ற தாயை இழந்த யானைகளுக்கும் இடையே இருந்த ஆழமான அன்பையும் அவர்களின் வாழ்வியலை பேசும் இந்த குறும்படம் இந்தியாவின் முதல் ஆஸ்கர் விருது வென்ற குறும்படம் என்ற பெருமையை பெற்றது.

இந்த நிகழ்வு இந்திய ரசிகர்களால் பாராட்டுகளையும் முதுமலை சுற்றுலா பயணிகளின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த ஆவணத்தில் முக்கிய கருவாக இடம் பெற்றிருந்த பொம்மன், பெள்ளி என்ற பழங்குடி தம்பதியினர் உலகளவில் மக்களின் கவனத்தை பெற்று பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் ஆதரவற்ற யானைக் குட்டிகளை பரமாரித்த ஆஸ்கார் புகழ் பொம்மன், பெள்ளி தம்பதியினரை நேரில் அழைத்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பாராட்டுகளை தெரிவித்தார். இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்கள் குடியரசு தலைவர் பக்கத்தில் வெளியானது. பின்னர் மக்களால் பாராட்டுகளுடன் அப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக தமிழ் நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை செயலகத்திற்கு பழங்குடி தம்பதியரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் அதனுடன் இருவருக்கும் தலா ரூ 1 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும் அந்த ஆவணப் பட இயக்குனர் கார்த்திகிக்கு ஒரு கோடி ரூபாய் ஊக்க தொகையும் வழங்கி கௌரவித்தார். இவர்களுடன் பிரதமர் மோடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதுமலை பகுதிகளுக்கு வந்திருந்த போது பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சென்று பேசி வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.