“நடந்ததை மறந்து விடுங்கள்..” ரசிகர்களுக்கு விஷால் கொடுத்த அட்வைஸ்.! இனையத்தில் வைரலாகும் வீடியோ இதோ...

ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி நடிகர் விஷால் வெளியிட்டுள்ள வீடியோ வைரல் - Actor vishal motivational video goes viral | Galatta

தென்னிந்தியாவின் குறிப்பிடப்படும் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். அதிரடி ஆக்ஷனுடன் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று தற்போது கொண்டாடப் பட்டு வருகிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வீரமே வாகை சூடும்’, ‘லத்தி’  ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் மற்றும் பகீரா ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தின் இறுதிகட்ட வேலை தற்போது மும்முரமாக நடைபெற்று கொண்டிருகிறது. அதை தொடர்ந்து தயாரிப்பாளரகவும் நடிகராகவும் பல ஹிட்டுகளை கொடுத்த நடிகர் விஷால்  முதல் முறையாக இயக்குனராக கலமிறங்கவிருக்கும் ‘துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் ஹரி கூட்டணியில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘விஷால் 34’ என்ற படத்தில் நடிகர் விஷால் நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே தொடர்ந்து பெற்று கவனம் ஈர்த்து முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காலையில் உடற்பயிற்சி மேற்கொண்டு தொகுப்பாக வெளியான வீடியோவில் விஷால் ரசிகர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தகவலை பகிர்ந்துள்ளார். அந்த தகவலில்,   நீங்கள் நினைக்கலாம் கடவுள் உங்களுக்கு தேவையானதை கொடுக்கவில்லை என்று.. நீங்கள் நினைக்கலாம் தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு கொடுக்கிறார் என்று..  அதை பற்றி நினைக்க வேண்டாம். உங்கள் எதிர்காலம் , உங்கள் வாழ்க்கை உங்களுக்கு என்ன கொடுத்தது என்று  எல்லாம் நினைத்து பாருங்கள்.. அதை நோக்கி ஓடுங்கள்.. கடந்த காலத்தை மறந்துவிடுங்கள்.  வந்த பாதையை திரும்பி பார்ப்பதில் பயணில்லை.. எதிர்காலத்தை நோக்கி ஓடுங்கள். நல்ல காலம் அது வெகுதூரத்தில் இருக்க கூடும்.

நீங்கள் நல்ல எண்ணத்துடன் ஓட ஆரம்பித்து விட்டால் அல்லது நடக்க ஆரம்பித்து விட்டால் நம்புங்கள் அந்த தூரம் குறைந்துவிடும். நீங்கள் விரைவில் சேர்ந்து விடலாம். இது நம் கஷ்டங்கள், பிரச்சனைகளை கடப்பது அல்ல. நாம் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி நகர்கிறோம். என்று பேசியுள்ளார் நடிகர் விஷால்.

இது குறித்து வெளியான வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே நடிகர் விஷால் சமூக நலனை கருத்தில் கொண்டு பல விஷயங்களை தனது ரசிகர்களுக்கு அறிவுருத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Time to motivate, Time to steal the future, Time to lead a positive, harmonious & healthy lifestyle.

Just a thought to share.#FitnessGoals #MentalHealth #LifeStyleGoals #LoveYourLifeYourStyleNotLifeStyle pic.twitter.com/U1uZ8OYndU

— Vishal (@VishalKOfficial) July 18, 2023

 

“8 மாசம் வேலையில்ல.. சாப்பிட காசு இல்ல..” மோசமான அனுபவம் குறித்து பிரபல நடிகர் அப்பாஸ்.. –  Exclusive Interview உள்ளே..
சினிமா

“8 மாசம் வேலையில்ல.. சாப்பிட காசு இல்ல..” மோசமான அனுபவம் குறித்து பிரபல நடிகர் அப்பாஸ்.. – Exclusive Interview உள்ளே..

ஜவான், மகாராஜாவை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெரி கிறிஸ்மஸ்’.. - ரிலீஸ் தேதியுடன் வைரலாகும்  அட்டகாசமான அறிவிப்பு.!
சினிமா

ஜவான், மகாராஜாவை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெரி கிறிஸ்மஸ்’.. - ரிலீஸ் தேதியுடன் வைரலாகும் அட்டகாசமான அறிவிப்பு.!

விஷ்ணு விஷால் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ‘லால் சலாம்’ இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் பதிவு உள்ளே..
சினிமா

விஷ்ணு விஷால் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ‘லால் சலாம்’ இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் பதிவு உள்ளே..