‘ஹுக்கும்’ பாடல் உருவான விதம் குறித்து ஜெயிலர் பட பாடலாசிரியர் சூப்பர் சுப்பு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ உள்ளே..

ஜெயிலர் ஹுக்கும் உருவான விதம் குறித்து சூப்பர் சுப்பு பகிர்ந்த தகவல் - Jailer Lyricist Subu about supertstar rajinikanth Hukum making | Galatta

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை இயக்குகிறார் இயக்குனர் நெல்சன். படத்தின் அறிவிப்பிலிருந்தே ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது. முதல் பார்வை தொடங்கி சமீபத்தில் தமன்னாவின் அசத்தலான நடனத்துடன் வெளியான ‘காவலா’ பாடல் வரை ரசிகர்களிடையே தொடர்ந்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் சூப்பர் சுப்பு எழுதிய ஹுக்கும் என்ற பாடல் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. ரஜினி ரசிகர்கள்  மட்டுமல்லாமல் ஹுக்கும் பாடலை ஒட்டுமொத்த திரையுலகினரும் கொண்டாடி வருகின்றனர்.  

இந்நிலையில் ஹுக்கும் பாடலின் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் ஹுக்கும் பாடல் உருவான விதம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.. அதில் பாடல் உருவான விதம் குறித்து பேசுகையில்,

"இந்த பாட்டுக்கு நான் மெனக்கெடல.. நமக்கு பிடிச்ச விஷயத்துக்கு மெனக்கெட தேவையில்லை.. இந்த பாட்டு 1 மணி நேரத்துல எழுதி முடிச்சாச்சு..  பாட்டோட வீடியோவே போட்டே காமிச்சாங்க. நான் பார்த்த காட்சியெல்லாம் சொல்ல முடியல.. படத்துல பல தரமான விஷயங்கள் உள்ளது. அதை பார்த்து தான் எழுதுனேன். அந்த காட்சி எதுக்கு போட்டாருனா எனக்கு அந்ந காட்சியோட எமோஷன்ஸ் தெரியனும் . எனக்கு கொடுத்த ஒரே விளக்கம் 'மாஸ் பண்ணுங்க'.. னு சொன்னார் அனிருத் ரசிகரோட பல்ஸ பிடிச்சு வெச்சிருக்காரு.. அவன் பன்ற வேலைய அவ்ளோ எனர்ஜிய கொடுக்குறாரு.. அந்த எனர்ஜி சாதாரணமான விஷயம் இல்ல.. யார் யாரெல்லாம் யாரோடு ரசிகரா இருக்காங்களோ அவங்க ஒருநாள் தலைவர் ரசிகரா இருந்துருப்பாங்க.. அவங்க யாருக்கு ரசிகரோ அவங்களே தலைவர் ரசிகர் தான். அதனால் தலைவர் பொது சொத்து மாதிரி.. அவர் பாரதியார் கவிதைகள் மாதிரி.. எல்லோரும் கொண்டாட வேண்டிய விஷயம் என் வாயில வந்துடுச்சு.. இந்த படம் மேல எனக்கு எக்கச்சமா நம்பிக்கை இருந்தது.  எனக்கு 6 மாதம் முன்னாடி அனிருத் இந்த பாட்டு வாய்ப்பு கிடைத்தது. ஆனா படத்தோட டீசர் வருது ஆனா எந்த அழைப்பும் வரல.. அப்பறம் சில மாதங்களுக்கு முன்னாடி அனிருத் கூப்டு கொடுத்தார்.." என்றார்

மேலும் இயக்குனர் நெல்சன் குறித்து பேசுகையில், "அனிருத் தான் ஹிக்கும் பாடலுக்கு விளக்கம் கொடுத்தார். இன்னொரு பாட்டு இந்த படத்துல எழுதிருக்கேன் அந்த பாடலுக்கான காட்சிகளையும் காட்டிட்டாங்க..  அந்த காட்சிகளையும் பார்த்தா நான் அவ்ளோ ஆரவாரமா ஆகிட்டேன். அதை ரொம்ப அடக்கி வெச்சிட்டேன்.  இரண்டாவது பாடலுக்கான நெல்சன் விளக்கம் கொடுத்தாங்க.. ஒரு மனுஷனுக்கு ஒரு முறைதான் அந்த மாதிரி கஷ்டம் வரும் . நெல்சன் அந்த கஷ்டத்தையெல்லாம் சிரிப்பா மாத்தி ஜாலியா தான் இருக்காரு. " என்றார்.

 

ஜவான், மகாராஜாவை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெரி கிறிஸ்மஸ்’.. - ரிலீஸ் தேதியுடன் வைரலாகும்  அட்டகாசமான அறிவிப்பு.!
சினிமா

ஜவான், மகாராஜாவை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெரி கிறிஸ்மஸ்’.. - ரிலீஸ் தேதியுடன் வைரலாகும் அட்டகாசமான அறிவிப்பு.!

விஷ்ணு விஷால் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ‘லால் சலாம்’ இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் பதிவு உள்ளே..
சினிமா

விஷ்ணு விஷால் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ‘லால் சலாம்’ இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் பதிவு உள்ளே..

தலைவா முதல் மாஸ்டர் வரை.. உலக புகழ்பெற்ற விம்பிள்டனை ஆக்கிரமித்த தளபதி விஜய்.. – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..
சினிமா

தலைவா முதல் மாஸ்டர் வரை.. உலக புகழ்பெற்ற விம்பிள்டனை ஆக்கிரமித்த தளபதி விஜய்.. – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..