“தலைவரை எந்த தலைமுறையிலும் அடக்க முடியாது..” ஜெயிலர் பட பாடலாசிரியர் சூப்பர் சுப்பு பகிர்ந்து கொண்ட தகவல் – Exclusive Interview உள்ளே..

ஜெயிலர் ஹுக்கும் பாடல் குறித்து பாடலாசிரியர் சூப்பர் சுப்பு பகிந்து கொண்ட வீடியோ – Lyricist  Super subu about hukum superstar rajinikath | Galatta

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிரட்டலான ஸ்டைலான நடிப்பில் உருவாகும் இப்படம் பக்கா கமர்ஷியல் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது.  இப்படத்தில்  சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்க மேலும் இவர்களுடன் நடிகை தமன்னா, மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். இது போக வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், ஆடுகளம் கிஷோர் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

இவரது இசையில் முன்னதாக வெளியான காவலா படம் நாடு முழுவதும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற மற்றொரு சூப்பர் டூப்பர் பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. ‘ஹுக்கும்’ என்ற பாடல் சூப்பர் ஸ்டாரின் மாஸ் பாடல்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. மேலும் ரசிகர்களை கவர்ந்த ஹுக்கும் பாடல் தற்போது இணையத்தில் டிரெண்ட்டிங்கில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஹுக்கும் பாடலின் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் ஹுக்கும் பாடலுக்கு வரிகள் எழுதிய அனுபவம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் பேசுகையில்.

"ரஜினி சார எந்த தலைமுறையில அடக்கி விட முடியாது. அவருக்கு எதிர்ல இருக்க நடிகர் பட்டியல் மாறிட்டே இருக்கும். தலைவர் சொன்னா மாதிரி தான் உச்சில இருந்தா போர் அடிக்கும் அப்பப்போ கீழ இறங்கி வரனும்.. ன்றது. பேரும் பட்டமும் அவரவர் அடையாளங்கள். உலகத்துல ஒருத்தர் அடையாளத்தை எடுத்துக்க நிறைய பேர் நினைப்பாங்க..  சூப்பர் ஸ்டார் ன்ற பட்டத்துல அவர் தான் இருக்காரு.

எனக்கு அவர் அப்படி தான் தெரியுறாரு..  அந்த சூப்பர் ஸ்டார் பட்டம் என்ன பொறுத்தவரை தலைவருக்கு.. அவர் அங்கதான் இருக்காரு.. நான் சொன்ன வார்த்தைகள் உண்மையின்றதால தான் பாட்டு நல்ல வரவேற்பு கிடைக்குது.. இந்த பாடலுக்கு வரவேற்பு கொடுக்குறவங்க எல்லோரும் பொது மக்கள் தான்..” என்றார் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு.

அதை தொடர்ந்து ஹுக்கும் பாடல கேட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்ட தகவல் குறித்து அவர் பேசுகையில். “ரஜினி சார் பாட்டு கேட்டுட்டு வாய்ஸ் நோட் அனுப்புனாரு.. நான் இந்த பாட்ட கேட்டதோடு அவர் அனுப்புன வாய்ஸ் நோட் அதிகமா கேட்டேன். பாடல் முடிச்சுட்டு அனிருத் அனுப்புனார். நான் பாட்டுதான் நினைச்சு கேட்டேன். அதுல 'வணக்கம் சுப்பு நான் ரஜினிகாந்த் பேசுறேன்' னு ஒரு ஆடியோ.. இதுக்கு மேல என் வாழ்க்கையில பண்ண வேண்டியது என்ன இருக்கு.. இன்னொரு வாய்ஸ் நோட்ல அனிருத் பத்தி பேசிட்டு லாஸ்ட் ல அர்தமாயிந்தா ராஜா சூப்பர் மா னு சொன்னார்.”  என்றார் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு.

மேலும் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு அவர்கள் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகும் ஜெயிலர் படம் குறித்து பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

‘ஹுக்கும்’ பாடல் உருவான விதம் குறித்து ஜெயிலர் பட பாடலாசிரியர் சூப்பர் சுப்பு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ உள்ளே..
சினிமா

‘ஹுக்கும்’ பாடல் உருவான விதம் குறித்து ஜெயிலர் பட பாடலாசிரியர் சூப்பர் சுப்பு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ உள்ளே..

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் குறித்து  அருண் விஜய்.. - இணையத்தில் வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் குறித்து அருண் விஜய்.. - இணையத்தில் வைரலாகும் பதிவு உள்ளே..

“8 மாசம் வேலையில்ல.. சாப்பிட காசு இல்ல..” மோசமான அனுபவம் குறித்து பிரபல நடிகர் அப்பாஸ்.. –  Exclusive Interview உள்ளே..
சினிமா

“8 மாசம் வேலையில்ல.. சாப்பிட காசு இல்ல..” மோசமான அனுபவம் குறித்து பிரபல நடிகர் அப்பாஸ்.. – Exclusive Interview உள்ளே..