“கைதி மாதிரியான படம் அது..” தளபதி விஜயின் ‘லியோ’ குறித்து லோகேஷ் கனகராஜ்.. – அட்டகாசமான அப்டேட்டுடன் வைரலாகும் வீடியோ உள்ளே..

தளபதி விஜயின் லியோ குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல் - Lokesh kanagaraj Update about Thalapathy Vijay leo | Galatta

ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து நிற்கும் திரைப்படம் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘லியோ’ திரைப்படம். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் அட்டகாசமான ஆக்ஷன் கதைகளத்தில் உருவாகும் இப்படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் படத்தில் இவர்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இணையும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்திற்கு படத்தொகுப்பு செய்து வருகிறார். மேலும் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். முன்னதாக இவரது இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று டிரெண்டிங்கானது.

மிரட்டலான ஆக்ஷன் கதைகளத்தில் உருவாகும் இப்படத்திற்கு அறிவிப்பிலிருந்தே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தளபதி விஜயின் வாரிசு படத்திற்கு பின் வெளியாகும் மிகப்பெரிய வெற்றி படமாக லியோ அமையும் என்று திரையுலகம் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோயம்பத்தூர் தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு வருகை நாளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாணவர்களுக்கு கல்லூரியின் முக்கியத்துவம் குறித்து அறிவிப்பு வழங்கினார். அதன்பின் மாணவர்கள் இயக்குனர் லோகேஷ்  கனகராஜிடம் பல சுவாரஸ்யமான கேள்விகளை கேட்டனர். விழாவில் லியோ திரைப்படம் குறித்து கேட்கபட்ட கேள்விகளின் சிறப்பு தொகுப்பு இதோ..

மாணவர் ஒருவர், “லியோ திரைப்படம் Lokesh cinematic universe (LCU) ல் வருகிறதா? என்ற கேள்விக்கு, “இன்னும் மூன்று மாதம் உள்ளது. இப்போது சொன்னால் அது சர்ப்ரைஸாக இருக்காது..” என்றார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படம் குறித்து கேட்கையில், “லியோ திரைப்படம் வெளியான பின் அது குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்று பதிலளித்தார். பின்னர் மாணவர் ஒருவர் வேடிக்கையாக லியோ படத்தில் திரிஷாவிற்கு எதுவும் ஆகாதுல என்று கேட்க.. அதற்கு லோகேஷ் சிரித்தபடி “அதெல்லாம் ஒன்னும் ஆகாது” என்றார். அதை தொடர்ந்து மாணவர் ஒருவர் லியோ படத்தின் அடுத்த பாடல் எப்போது வரும் என்று கேட்க அதற்கு அவர், “இரண்டாவது பாடல் கொஞ்சம் தாமதாம வரும்.. ஒவ்வொரு பாடலும் வர இது சாதரணமான படம் இல்லை.. இது கைதி படம் மாதிரி..” என்றார். ஆர்பரிப்புடன் லியோ படம் குறித்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்து வந்தார்.

பின்னர். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த மிகபெரிய சாதனை என்ன என்று கேட்க..? “எங்க ஊரு தெருவல பாதி பேர் ரஜினி சார் ரசிகர்கள். நான் மட்டும் கமல் சார் ரசிகன். அவரை நடிக்க வைத்து இயக்குவதுப்  எனக்கு மிகப்பெரிய சாதனை” என்றார்.  நிகழ்ச்சி முடிந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜிடம், “அடுத்த படம் ரஜினிகாந்த் உடனா?”  என்று கேட்க அதற்கு அவர் “அடுத்த படம் குறித்த அறிவிப்பு தயாரிப்பு நிருவனமிடம் இருந்து மட்டுமே வரும்..” என்றார்.  

 

“நடந்ததை மறந்து விடுங்கள்..” ரசிகர்களுக்கு விஷால் கொடுத்த அட்வைஸ்.! இனையத்தில் வைரலாகும் வீடியோ இதோ...
சினிமா

“நடந்ததை மறந்து விடுங்கள்..” ரசிகர்களுக்கு விஷால் கொடுத்த அட்வைஸ்.! இனையத்தில் வைரலாகும் வீடியோ இதோ...

‘ஹுக்கும்’ பாடல் உருவான விதம் குறித்து ஜெயிலர் பட பாடலாசிரியர் சூப்பர் சுப்பு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ உள்ளே..
சினிமா

‘ஹுக்கும்’ பாடல் உருவான விதம் குறித்து ஜெயிலர் பட பாடலாசிரியர் சூப்பர் சுப்பு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ உள்ளே..

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் குறித்து  அருண் விஜய்.. - இணையத்தில் வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் குறித்து அருண் விஜய்.. - இணையத்தில் வைரலாகும் பதிவு உள்ளே..