கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப கலாட்டா குழுமம் மனமார வேண்டிக் கொள்கிறது. நுரையீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தற்போது உடல்நிலை தேறி வருகிறார் இன்னும் சில நாட்கள் அவருக்கு சிகிச்சை தேவைப்படும் நிலையில் அடுத்த சில தினங்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன் விஜய் பிரபாகர் நம்மோடு பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர் அந்த வகையில், “கடந்த வாரம் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது, கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை பின்னடைவு என்று… அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது ஒவ்வொருவரும் ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னார்கள். உங்களுக்கு அது எப்படி இருந்தது?” எனக் கேட்டபோது,

“சற்று பின்னடைவு ஆனால் கேப்டன் சூப்பராக இருக்கிறார் என்று சொல்கிறார்கள் அதை ஏன் யாரும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அதை ஏன் தலைப்பாக வைக்கவில்லை. அதை ஏன் பிரபலப்படுத்தவில்லை. சின்ன வார்த்தை “பின்னடைவு” என்ற ஒரு வார்த்தையை தலைப்பாக வைத்து வைத்து இருக்கிற செய்தித்தாள்கள், செய்தி ஊடகங்கள், Youtube சேனல்கள் அதை வைரலாக்கினர். இப்போது நான் என்ன சொல்கிறேன் என்றால் எங்களுக்கு தெரியும் நாங்கள் கூடவே இருக்கிறோம் அவருக்கு எப்படி இருக்கிறது என்று தெரியும். எங்களுக்கு பயமே கிடையாது ஆனால் நீங்கள் பார்க்கிறீர்களா கடைக்கோடியில் ஒரு தொண்டன் இருக்கிறான் யார் அவனுக்கு செய்தியை சொல்வார். அவர்கள் எவ்வளவு பயப்படுகிறார்கள். யார் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்வது. யாருக்கும் ஃபோனில் சொல்ல முடியவில்லை, ஃபோனை எடுக்க முடியவில்லை அவ்வளவு ஃபோன் கால்கள் வருகின்றன. அதையே வேலையாக வைத்துக் கொண்டு கேப்டன் நன்றாக இருக்கிறார் நன்றாக இருக்கிறார் என்று பதிலா சொல்லிக் கொண்டே இருக்க முடியும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அறிக்கை கொடுத்து விட்டோம். அதையெல்லாம் எந்த சேனலிலும் மீடியாவிலும் குறிப்பிட்டு பேசவில்லை. ஏதாவது ஒரு சின்ன மைனஸ் இருந்தாலும் அதை பிடித்துக் கொள்கிறார்கள். அதைத்தான் நான் கேட்டேன். அதை வைரலாக்க வேண்டும் ட்ரெண்டாக்க வேண்டும் என்பதோடு உங்களுடைய வேலை முடிந்து விடுகிறது. ஒரு குடும்ப உறுப்பினராக, கட்சியின் தலைமையில் இருப்பவராக, எங்கள் கட்சியின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு தொண்டனுக்கு நாங்கள் எப்படி இந்த செய்தியை கொண்டு போய் சேர்ப்பது. நான் என்ன சொல்கிறேன் என்றால், இங்கே எப்போதும் 10 பேர் 20 பேர் இருக்கிறார்கள் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் தலைமை கழகத்தின் நம்பர் தருகிறோம் அதில் அழைத்து கேளுங்கள். நாங்கள் பதில் சொல்கிறோம். நீங்களாக ஏதோ ஒன்று போடுகிறீர்கள் அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். இப்படி செய்வது எங்களுக்கு எவ்வளவு வலியை கொடுக்கும் என யாரும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். கேப்டன் ஒரு லெஜன்ட் அவரைப்பற்றி தவறான ஒரு சித்தரிப்பு வைத்து வைத்து தான் இப்போது அவருடைய இந்த ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது என நான் உறுதியாக சொல்வேன்.”

என தெரிவித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…