ஒரு சிலர் மட்டுமே காலம் கடந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பார். அந்த சிலரில் ஒருவராய் இருப்பவர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் தோனி. ஒரு தலைமுறையினரை தன் தன்முனைப்பினாலும் விடா முயற்சியினாலும் ஈர்த்து சாதித்தவர் எம்.எஸ் தோனி. உலக கோப்பைக்கு பின் தோனியின் ரசிகர் பட்டாளம் பெரிதளவு விரிவடைந்தது. இந்திய அணியில் ஒய்வு பெற்றாலும் தற்போது ஐபில் தொடரில் 'சென்னை சூப்பர் கிங்க்ஸ்' காகவிளையாடி கொண்டிருக்கிறார் தோனி.

தோனியின் வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ‘எம் எஸ். தோனி . அன் டோல்டு ஸ்டோரி’ இந்திய அளவு மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் விளம்பர பணியில் தோனி பல மாநிலங்களில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தோனியின் ஓய்வையடுத்து அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்று இந்தியாவே எதிர்பார்க்கும் போது தோனி எடுத்த முடிவு சினிமா துறையில் அவரது வருகை. இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு அளித்தது.

அதன்படி தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவரும் இணைந்து இந்திய சினிமாவில் தயாரிப்பு துறையை தெரிந்தெடுத்து படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். ‘தோனி என்டர்டெயின்மன்ட்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினர். இதற்கு முன்பு இந்த தயாரிப்பில் ஐபி எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் போட்டியை அடிப்படையாக கொண்டு ‘ரோர் ஆப் லையன்’ எனும் ஆவன படத்தை தயாரித்தனர். மேலும் புற்றுநோய் விழிப்புணர்வு அடிப்படையில் ‘வுமன் டே அவுட்’ என்ற குறும்படத்தையும் தயாரித்துள்ளது.

தோனிக்கு உலகளவு ரசிகர்கள் இருந்தாலும் அவரது வெறித்தனமான ரசிகர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் தான் அதிகம். தமிழ் ரசிகர்கள் அவருக்கு அளிக்கும் வரவேற்பு அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி தோனி என்டர்டெயின்மன்ட் தயாரிப்பில் தனது முதல் படத்தை தமிழ் மொழியில் நேரடியாக தாயரிக்க முடிவு செய்தனர். இது முழுக்க முழுக்க குடும்ப படமாக அமையும். இந்த படத்தினை தயாரிப்பதால் தமிழ் மக்களுடனான பந்தம் வலுவடையும் என்று முன்னதாக தெரிவித்தனர். இந்நிலையில் தோனி என்டர்டெயின்மன்ட் தயாரிப்பில் தனது முதல் படத்தின் அறிவிப்பினை மோஷன் போஸ்டர் மூலம் அறிவித்தது படக்குழு.

தோனி மற்றும் அவரது மனைவி தயாரிக்கும் இப்படத்திற்கு 'lets get married' என்ற தலைப்பின் சுருக்கெழுத்தில் படத்திற்கு ‘LGM’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தினை ரமேஷ் தமிழ்மணி இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யான், ‘லவ் டுடே’ புகழ் இவானா மற்றும் யோகி பாபு நடிக்கவுள்ளனர். இதனையடுத்து இந்த அறிவிப்பினை பரவலாக பகிர்ந்து வருகின்றனர் தோனி ரசிகர்கள். மேலும் படத்தில் பணியாற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

தோனி கிரிக்கெட் தவிர, சென்னையின் எஃப்.சி கால்பந்து அணி, உடற்பயிற்சிக் கூடம், இயற்கை விவசாயம் என பல்வேறு தொழில்களில் தோனி முனைப்பு காட்டி வருகிறார். இதனையடுத்து திரையுலகில் தயாரிப்பாளராக தோனி எடுத்து வைத்திருக்கும் முயற்சி இதுவென்பதால் அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.