தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த பேட்ட படத்திற்கு பின் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நேரடியாக திரையரங்குகளுக்கு வரும் ஜிகர்தண்டா DOUBLEX திரைப்படம் வருகிற நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நமது திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு கலந்துரையாடிய போது பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில்,

“இப்போது ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் எடுப்பது என்பது ஒரு பெரிய சவால் நீங்க அந்த சவாலை எப்படி கையாண்டீர்கள்..? இதை கொஞ்சம் விளக்குங்கள் உங்களுக்கு யாராவது, “இவ்வளவு நேரம் இருக்கிறது” “இந்த தேதியில் ரஜினிகாந்த் இருக்கிறார் நீங்கள் அதற்குள் முடிக்க வேண்டும்” அந்த மாதிரி சொன்னார்களா அல்லது நீங்கள் ஏற்கனவே ஸ்கிரிப்ட் வைத்திருந்தீர்களா? ரஜினிகாந்த் அவர்கள் அழைக்கும் போது என்னிடம் இந்த கதை இருக்கிறது இதை பண்ணலாம் என சொன்னீர்களா?" எனக் கேட்டபோது,

“நான் பேட்ட படத்தின் கதையை 2015 ஆம் ஆண்டே சொல்லிவிட்டேன். மொத்த திரைக்கதையாக இல்லை. ஆனால் ஐடியாவாக தொடக்கம் இடைவேளை முடிவு என ஐடியா இருந்தது. நான் 2015 ஆம் ஆண்டு சென்று அவரிடம் அந்த கதையை சொல்லிவிட்டேன். அவருக்கு அப்போதே அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அப்போதுதான் கபாலி படம் அறிவித்திருந்தார்கள். “கபாலி முடிந்த பிறகு நாம் பார்க்கலாம். ஆனால் இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதை செய்தால் நான் தான் செய்ய முடியும் பண்ணலாம்.” என சொல்லி இருந்தார். நான் கபாலி படத்திற்கு பிறகு நடக்கும் என நினைத்திருந்தேன். அதன் பிறகு காலா படம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவருடைய அரசியல் விஷயங்கள் போய்க்கொண்டிருந்தது. அந்த ஒரு தருணத்தில் இது நடக்காது என நினைத்திருந்தேன். அப்போது கிட்டத்தட்ட 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் தலைவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. “அந்த கதையை இன்னொரு முறை எனக்கு சொல்லுங்கள்” என கேட்டிருந்தார். அதற்கு நடுவில் நான் கொஞ்சம் மாற்றங்கள் செய்து வைத்திருந்தேன். அதைக் கேட்டு முடித்த பிறகு கை கொடுத்தார். கை கொடுத்துவிட்டு, “நாம் இந்த படம் பண்ணுகிறோம் அடுத்த பொங்கலுக்கு படம் ரிலீஸ் சன் பிக்சர்ஸ் தான் தயாரிப்பாளர்கள்” என சொன்னார். அதன் பிறகு நான் திரைக்கதையை எழுத ஆரம்பித்தேன். அதற்கு சில மாதங்கள் எடுத்துக் கொண்டேன். பின்னர் ப்ரீ ப்ரோடுக்ஷன் செய்துவிட்டு, ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கினோம். அக்டோபர் 19ஆம் தேதி படப்பிடிப்பை நிறைவு செய்து அடுத்த இரண்டு மாதங்களில் போஸ்ட் ப்ரோடக்சன் செய்து படத்தை வெளியிட்டோம்.” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் அந்த முழு பேட்டி இதோ...