தேர்ந்த நடிகராக தரமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் கார்த்தி இந்த ஆண்டில்(2022) விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்களில் வெரைட்டியான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதுபோலவே இந்த மூன்று திரைப்படங்களும் வெற்றி படங்களாக கார்த்தி இந்த ஆண்டு ஹாட்ரிக் ஹிட்டடித்தார்.

இந்த வரிசையில் அடுத்ததாக குக்கூ, ஜோக்கர், ஜிப்சி என தரமான திரைப்படங்களை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜப்பான். கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

முன்னதாக கார்த்தியின் சகுனி, காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி மற்றும் சுல்தான் ஆகிய படங்களை தயாரித்த ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் ஜப்பான் திரைப்படத்தையும் தயாரிக்கிறது. பொன்னியின் செல்வன் பட ஒளிப்பதிவாளரும் இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளருமான ரவிவர்மன், ஜப்பான் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

GV.பிரகாஷ் குமார் இசையமைக்கும் ஜப்பான் படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். இந்நிலையில் கார்த்தியின் திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக தயாராகும் ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று நவம்பர் 8-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைரலாகும் ஜப்பான் படப்பூஜை புகைப்படங்கள் இதோ…
 

#Japan Pooja Pictures☺️@Karthi_Offl @Dir_Rajumurugan @gvprakash @ItsAnuEmmanuel @dop_ravivarman @anbariv @philoedit @Prabhu_sr #Karthi25 pic.twitter.com/2iSwzdslxJ

— DreamWarriorPictures (@DreamWarriorpic) November 8, 2022

#Japan Pooja Stills @Karthi_Offl @Dir_Rajumurugan @gvprakash @ItsAnuEmmanuel @dop_ravivarman @anbariv @philoedit @Prabhu_sr #Karthi25 pic.twitter.com/5F7EF1Zcdq

— DreamWarriorPictures (@DreamWarriorpic) November 8, 2022