பொதுவாகவே வார இறுதியில் திரைப்படங்கள் வெளியாவதும் முக்கிய தினங்களில் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வகையில் முக்கிய தினங்களில் ஒன்றான காதலர்கள் காதலை கொண்டாடும் காதலர் தினமும் ஒன்று. ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ம் தேதி காதலர் தினம் உலகம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களின் அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் வகையில் பூக்கள், பரிசுகள் பகிர்ந்து கொள்வது வழக்கம் மேலும் அந்த நாளில் வெளியில் செல்வதும் வழக்கம்.காதலர்கள் பெரிதும் விரும்பி செல்லும் இடமாக திரையரங்குகள் உள்ளது. அதன்படி காதலர் தினத்தில் காதல் திரைப்படங்கள் இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் அல்லவா.‌ அதன் படி பல ஆண்டுகளாக காதல் படங்கள் வெளியாவதும் அல்லது ஏற்கனவே வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த காதல் படங்களை ரீ ரிலீஸ் செய்வதும் நம் நாட்டில் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு காதலர் தினத்தில் வெளியாகும் திரைப்படங்கள் என்னென்ன? என்பதை பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு.

1. விண்ணை தாண்டி வருவாயா (2010)

இயக்குனர் : கெளதம் வாசுதேவ் மேனன்

நடிகர்கள் : சிலம்பரசன் TR, திரிஷா

இசை : ஏ ஆர் ரஹ்மான்

2. மின்னலே (2001)

இயக்குனர் : கெளதம் வாசுதேவ் மேனன்

நடிகர்கள் : மாதவன், ரீமா சென், விவேக், அப்பாஸ்

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு தமிழில் வெளியாகும் இரண்டு திரைப்படங்களும் கவுதம் மேனன் படங்கள் தான். இந்த இரண்டு திரைப்படங்களும் காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படங்கள். மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3. பிரேமம் (2015)

இயக்குனர் : அல்போன்ஸ் புத்திரன்

நடிகர்கள் : நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபஸ்டின், அனுபமா பரமேஸ்வர்

இசை :ராஜேஷ்

4. ஹிருதயம் (2022)

இயக்குனர் :வினீத் ஸ்ரீனிவாசன்

நடிகர்கள் :பிரணவ் மோகன் லால், கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா

இசை : ஹசீம் அப்துல்

தமிழ் ரசிகர்கள் தமிழ் மொழி படங்களை தாண்டி அதிகம் பார்த்து ரசிக்க கூடிய மொழி திரைப்படங்கள் என்றால் அது மலையாள திரையுலகம் தான். அதன்படி தமிழ் ரசிகர்ள் கொண்டாடி தீர்த்த பிரேமம் மற்றும் ஹிருதயம் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆவது காதலர்களுக்கு மட்டுமல்ல பொதுவான ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

5.தில்வாலே துல்கானியா லே சாயேங்கே (1995)

இயக்குனர் :ஆதித்யா சோப்ரா

நடிகர்கள் : ஷாருக் கான்,கஜோல், அம்ரிஷ் பூரி

இசை :ஜதின் லலித், லலித் பண்டிட்

6. தமாஷா (2015)

இயக்குனர் :இம்தியாஸ் அலி

நடிகர்கள் : ரன்பீர் கபூர், தீபிகா படுகோன்

இசை : ஏ ஆர் ரஹ்மான்

தமிழர்கள் கொண்டாடி தீர்த்த இரண்டு முக்கிய இந்தி திரைப்படங்கள் இந்த காதலர் தினத்தில் வெளியாவது கூடுதல் சிறப்பு தான். குறிப்பாக 90 களில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தில்வாலே துல்கானிய லே சாயேங்கே திரைப்படம் இன்றும் கொண்டாடும் திரைப்படமாக உள்ளது.

7.டைட்டானிக் (1997)

இயக்குனர் : ஜேம்ஸ் கேமரூன்

நடிகர்கள் : லியர்னாடோ டி காப்ரியோ, கேட் வின்ஸ்லட்

இசை :ஜேம்ஸ் ஹார்னர்

உலகளவில் காதலர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம் டைட்டானிக். பிரம்மாண்டமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் பல ஆண்டு கழித்தும் ஆளும் திரைப்படமாக இருக்கும் டைட்டானிக் இந்த ஆண்டு காதலர் தினத்தில் வெளியாவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.