இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற கலைஞராய் வலம் வரும் ஜாம்பவான்கள் இளையராஜா மற்றும் மணிரத்தினம். கருப்பு வெள்ளை காலம் தொடர்ந்து இன்றையை மாடர்ன் லவ் வரை இளையராஜா இல்லாத வீடுகளே இல்லை. கிராமபோன் ரெக்கார்ட் முதல் இன்று இணைய வழி ஆப்கள் மூலமாகவும் ரசிகர்களின் உணர்வுகளோடு வாழ்கிறார் இசைஞானி இளையராஜா. மூத்த நடிகர் முதல் முகம் தெரியாத புது நடிகர் வரை இளையராஜா இசையில் வந்து விட மாட்டோமா என்ற ஏக்கம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கும் இளையராஜா ரசிகர்கள் முனுமுனுக்கும் பெயராய் இசையாய் ஒலித்துக் கொண்டிருப்பார். சமீபத்தில் இவர் இசையில் வெளியான விடுதலை. மாடர்ன் லவ் சென்னை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சபட்ச நடிகர் என்றாலும் புதுமுக நடிகரென்றாலும் கதைக்கு மட்டுமே நாயகன் என்று கலையை நுணுக்கமாக செதுக்கும் மகா கலைஞர் இயக்குனர் மணிரத்தினம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலும் இரு வரியில் உணர்வு பூர்வமாக நடித்தால் மட்டும் போதும் என்று காட்சி வைப்பதும் ரசிகைகளின் கனவு கண்ணனாக வலம் வந்த கமல் ஹாசனை 60 வயது முதியவராய் காட்டுவதும் மணிரத்தினம் அவர்களால் மட்டுமே முடியும். இந்திய சினிமாவில் பல மொழிகளில் பல படைப்புகளை கொடுத்து ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களையும் இன்றைய பொன்னியின் செல்வன் வரை ஆச்சர்யபடுத்தி கொண்டிருப்பவர் இயக்குனர் மணிரத்தினம். இந்திய சினிமாவின் முகமாக தென்னிந்திய சினிமாவின் கௌரவாமாக விளங்கும் இரு ஜாம்பவான்களுக்கும் கலாட்டா மீடியா குழுமம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள்.. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு மிகப்பெரிய ஆளுமைகளின் கூட்டணியில் உருவான மிக முக்கியமான திரைப்படங்களின் பட்டியல் இதோ..

பல்லவி அனுபல்லவி (1983)

உணரு (1984)

பகல் நிலவு (1985)

இதய கோவில் (1985)

மௌன ராகம் (1986)

நாயகன் (1987)

அக்னி நட்சத்திரம் (1988)

கீதாஞ்சலி (1989)

அஞ்சலி (1990)

தளபதி (1991)

கூட்டணியில் இடம் பெற்ற திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே இன்னும் பல தாசாப்தங்கள் கடந்தும் பேசப்பட்டு வருகிறது. ஈடு இணையில்லா மனிதர்களின் கலை பயணம் கொண்டாட்டங்களுடன் தொடரும் என்று குறிப்பிட்டால் மிகையாகாது.