கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் விநாயகன் நாளை மறுநாள் நவம்பர் 24ஆம் தேதி வெளிவர இருக்கும் சீயான் விக்ரம் - இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் வில்லனாக மிரட்டியிருக்கிறார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் நடிகர் விநாயகன் குறித்து பேசும்போது,

“இப்போது விநாயகன் ஜெயிலர் திரைப்படத்தில் ஒன்று பண்ணியிருக்கிறார் சூப்பராக பண்ணியிருக்கிறார் மக்கள் அதை மிகவும் ரசித்திருக்கிறார்கள். ஆனால் நான் அவரை அப்படி பார்க்கவே இல்லை. ஒரு ரூமின் முன்னால் அவர் பிச்சை எடுப்பாரு அது மாதிரி நான் அவரை பார்த்ததே இல்லை. அவரை ரொம்பவும் ஸ்டைலான ஆடைகளில் தான் நான் பார்த்திருக்கிறேன். நான் அவரைப் பார்க்கும்போது என்னை மாதிரி இருக்கிறார் என்று தான் பார்த்தேன் ஆனால் அவர் பேசும்போது கொஞ்சம் லோக்கலாக பேசுவார்.” என்றார். தொடர்ந்து துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் இந்த கதாபாத்திரத்திற்காக நடிகர் விநாயகனை முடிவு செய்தது பற்றியும் படத்தில் அவர் நடித்திருப்பது பற்றியும் பேசிய போது,

“எனக்கு DD (திவ்யதர்ஷினி) தான் ஏன் இந்த விநாயகன் என்ற கேரள நடிகரை பார்க்க கூடாது என்று சொன்னார். எனவே கமாட்டிபாடம் படம் பார்த்தேன்... முதலில் அவரை அந்த விஷாலின் படத்திலும் மரியான் படத்திலும் அவ்வளவாக நான் கவனிக்கவில்லை. ஆனால் கமாட்டி பாடம் படம் பார்த்த பிறகு, எனக்கு அவரைப் பிடித்தது. மேலும் நான் எழுதிய அந்த கதாபாத்திரத்தை என் மனதில் இருந்ததிலிருந்து அந்த மாதிரி ஒரு நடிகராக நான் நினைக்கவில்லை. நான் அருண் விஜய் மாதிரியான ஒரு நடிகரை தான் தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் நாங்கள் அருண் விஜயை ஏற்கனவே விக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து விட்டோம். அந்த சமயத்தில் இருந்தே எனக்கு அருண் விஜய் மனதில் இருந்தால்தான் அப்படி எழுதினோம். எனவே மறுபடியும் அவர் இதில் நடிக்க முடியாது என்று சொல்லி வேறு யார் போகலாம் என யோசித்தபோது, DD விநாயகத்தை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு அவரைப் பார்த்தேன் அவரை எனக்கு பிடித்தது. அவர் இந்த படத்தில் என்ன செய்திருக்கிறார் என்பது மிகவும் அட்டகாசமானது. விக்ரம் மற்றும் விநாயகன் இடையிலான காட்சிகள், விக்ரம் டீம் - விநாயகன் டீம் இடையில் எப்படி பேசிக்கொள்வார்கள் என்கிற காட்சிகள், விநாயகன் - பார்த்திபன் சார் இடையிலான காட்சி ஒன்று இருக்கிறது, அதெல்லாம் தியேட்டர் மொமென்ட்களாக இருக்கும் என நினைக்கிறேன்.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் கௌதம் மேனனின் அந்த முழு வீடியோவை கீழே உள்ள எனில் காணலாம்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் அதிரடியான பக்கா ஆக்சன் படமாக சீயான் விக்ரம் நடித்திருக்கும் இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்காக கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.