துருவ நட்சத்திரம் முதல் விமர்சனம்: சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் ஆக்சன் & விஷுவல் ட்ரீட்டை ரசித்த லிங்குசாமியின் ரியாக்ஷன் இதோ!

சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் பட முதல் விமர்சனம் தந்த லிங்குசாமி,chiyaan vikram in dhurva natchathiram first review shared by lingusamy | Galatta

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் முதல்முறையாக நடிகர் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் அதிரடி ஆக்சன் படமான துருவ நட்சத்திரம் சாப்டர் 1 யுத்த காண்டம் திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை பிரபல இயக்குநர் லிங்குசாமி அவர்கள் தற்போது வெளியிட்டு இருக்கிறார். மும்பையில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை பார்த்து ரசித்த இயக்குனர் லிங்குசாமி தனது X பக்கத்தில் விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில், “FINAL CUT செய்யப்பட்ட துருவ நட்சத்திரம் திரைப்படத்தை மும்பையில் பார்க்க நேர்ந்தது. அது மிகவும் அட்டகாசமாக இருந்தது சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது படத்தின் விஷுவல் அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கிறது. நடிகர் சீயான் விக்ரம் மிகவும் கூலாக இருக்கிறார். நடிகர் விநாயகன் ஒட்டுமொத்தமாக படத்தில் எல்லா இடங்களிலும் மனதை கொள்ளை அடிக்கிறார். படத்தில் உள்ள பெரிய நடிகர்கள் பட்டாளத்தில் உள்ள எல்லோரும் அசத்தியுள்ளனர். வாழ்த்துக்கள் கௌதம் வாசுதேவ் மேனன் பிரதர் நீங்களும் ஹரிஷ் ஜெயராஜ் இணைந்து உங்களது காம்போவில் மேலும் ஒரு வைரத்தை எங்களுக்கு வழங்கி இருக்கிறீர்கள் சிறந்த ரிலீஸுக்கும் மிகப்பெரிய வெற்றிக்கும் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி அவர்களின் துருவ நட்சத்திரம் விமர்சனம் இதோ…

 

Happened to see the final cut of #DhruvaNatchathiram in mumbai & it was just fantastic. well made, visuals on par with the best.@chiyaan was so cool & #vinayakan stole everything in the movie. huge cast & everyone were brilliant. @menongautham congrats brother, u along with…

— Lingusamy (@dirlingusamy) November 21, 2023

இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சீயான் விக்ரம், முதல் முறை  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த ஆறு ஆண்டுகளில் வெவ்வேறு கட்டங்களாக பலமுறை படப்பிடிப்புகள் நடைபெற்று கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. வருகிற நவம்பர் 24ஆம் தேதி சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீயான் விக்ரம் உடன் இணைந்து ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

மனோஜ் பரமஹம்சா, SR.கதிர் மற்றும் விஷ்ணு தேவ் என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றி இருக்கும் இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு செய்ய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பக்கா ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு பிரபல ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பெண் ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் பக்கா ஸ்டைலான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - சீயான் விக்ரம் கூட்டணியில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு ரிலீஸாக இருப்பதாகவும் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்திருந்தார். அதன்படியே இந்த முறை எல்லா விஷயங்களும் நல்லபடியாக நடந்து முடிந்து துருவ நட்சத்திரம் திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவர ரெடி ஆகிவிட்டது.