கேப்டன் மில்லர் முதல் பாடல்: தனுஷின் அதிரடி அவதாரத்தில் வரும் பக்கா பீரியட் ஆக்சன் படத்தின் மிரட்டலான “கில்லர் கில்லர்” லிரிக் வீடியோ இதோ!

தனுஷின் கேப்டன் மில்லர் பட கில்லர் கில்லர் பாடல் வெளியீடு,dhanush in captain miller movie first single killer killer song out now | Galatta

ரசிகர்கள் நீண்ட காலமாக மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் தனுஷின் அதிரடி ஆக்சன் படமான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கில்லர் கில்லர் பாடல் தற்போது வெளியானது. ஜிவி பிரகாஷ் குமார் இசையில், கேபர் வாசுகி எழுதியிருக்கிற கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடலாக வந்திருக்கும் “கில்லர் கில்லர்” என்ற இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் வைபாகும் அளவிற்கு அதிரடியான ஜிவி பிரகாஷ் குமாரின் இசை, கேட்ட உடனே கவர்ந்திழுக்கும் தனுஷின் மிரட்டலான குரல் என வந்திருக்கும் இந்த கில்லர் கில்லர் பாடல் தற்போது சோசியல் மீடியாவை அதிர வைத்திருக்கிறது. ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடலான கில்லர் கில்லர் பாடலை கீழே உள்ள லிங்கில் கேட்டு மகிழுங்கள்.

 

தனக்கென தனி பாணியில் ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் முதல் முறையாக தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் தான் இந்த கேப்டன் மில்லர். 1930 -களில் நடைபெறும் கதைக் களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக  தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தனுஷுடன் இணைந்து சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்க, மற்றொரு முன்னணி கதாபாத்திரத்தில் ஜெயிலர் படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த கன்னட சினிமாவின் நட்சத்திர நடிகர் சிவராஜ்குமார் தனுஷின் கேப்டன் மில்லர் கதாபாத்திரத்தின் அண்ணன் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். இவர்கள் தவிர நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 


முன்னதாக வருகிற டிசம்பர் 15ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் உலகம் எங்கும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களுக்காக ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாக அறிவித்தப் படக்குழு, வருகிற 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக கேப்டன் மில்லர் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். அதே பொங்கல் வெளியீடாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் லால் சலாம் சிவகார்த்திகேயனின் அயலான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஹிந்தி படமான மெர்ரி கிறிஸ்மஸ் உள்ளிட்ட படங்களும் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் விரைவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. சமீபகாலமாக முன்னணி நட்சத்திர நாயகர்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில், தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.