தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்காக திரிஷாவுக்கு ஆதரவு கொடுத்த தேசிய மகளிர் ஆணையத்தை எதிர்த்து கேள்வி எழுப்பிய மன்சூர் அலிகான்! வீடியோ இதோ

திரிஷாவுக்கு ஆதரவு கொடுத்த தேசிய மகளிர் ஆணையத்தை எதிர்த்து மன்சூர் அலிகான்  கேள்வி,mansoor ali khan questioning ncw for trisha controversy | Galatta

தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை திரிஷா குறித்தும் தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகள் குறித்தும் அவதூறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் வன்மையான கண்டனம் தெரிவித்து காவல்துறையை நாடி ஐபிசி 509 பிரிவு பி மற்றும் இது சார்ந்த பிற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டு தங்களது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவிட்டு இருந்த நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் இது தொடர்பாக தன்னுடைய எதிர் கருத்துக்களை தெரிவித்து தேசிய மகளிர் ஆணையத்தை நோக்கி கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அந்த பேட்டியில்,

“சினிமாவில் பலாத்கார காட்சி என்பது நிஜத்திலும் பலாத்காரம் செய்வதா என்ன? சினிமாவில் ஒருவர் கொலை பண்ணுகிறார் என்றால், இப்போது அவை எல்லாவற்றையும் ஹீரோக்களே செய்து விடுகிறார்கள். விக்ரம் படத்தில் கமல் சார் பண்ணினார். அதெல்லாம் நான் நன்றே சொன்னேன் அதை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, சூர்யா பண்ணுகிறார் ஆஹா நன்றாக பண்ணுகிறார். எனக்கு கைதட்டுகிறார்கள் நிஜமாகவா அவர் கொலை பண்ணுகிறார் அங்கே... சினிமாவில் பலாத்கார காட்சி என்பது நிஜமாகவே பலாத்காரம் செய்வதா முட்டாள்களே... சங்கங்களுக்கு அறிவு வேண்டாமா... குறைந்தபட்ச அறிவு வேண்டாமா நடிகை மீரா ஜாஸ்மின் படத்தில் அறிமுகமானார் அப்போது அவரை தூக்கி ஒரு கட்டில் போட்டேன் அய்யய்யோ அடிபட்டுவிட்டதே என்று உடனே அசிஸ்டன்ட்டை கூப்பிட்டு அந்த துணி விலகி இருக்கிறது என்று துணியை மூடிவிட்டு அம்மா மன்னிச்சுக்கோ என கேட்டுவிட்டு அந்த ஸ்ப்ரே இருந்தால் அவர்களுக்கு அடித்து விடுங்கள். என இப்படி தான் நடக்கும். இதை நான் உங்களுடைய யோசனைக்கு விட்டு விடுகிறேன் எனக்கு தமிழ்நாடே உடன் இருக்கிறது. இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படுபவன் நான் அல்ல. அம்மா குஷ்பூ அம்மா இருக்கிறார்கள் பின்னர் அந்த ஆணையம் என்ன ஆணையமோ பூனையமோ எனக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் இதெல்லாம் ஒரு விஷயமா இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா? நான் அந்த காலத்தில் இருந்து குரூப் டான்ஸராக இருந்து எல்லோரையும் பார்த்தவன். இப்படி எந்த கதாநாயகிகளையும் கலைஞர்களையும் அவ்வளவு இழுக்காக பேசுபவன் அல்ல... எல்லாம் தெரிந்தாலும் நான் அனைவரையும் அரவணைத்து போகிறவன். என் மதிப்புக்குரிய அண்ணன் நடிகர் எஸ்.வி.சேகர் அவர்கள் கூட சொல்லி இருக்கிறார். அவர் என்ன சொன்னார் என்று உங்கள் எல்லாருக்கும் தெரியும் தானே... குஷ்பூ அக்கா அவர்களே எஸ் வி சேகர் சொல்லி இருக்கிறார் பெண்கள் எல்லோருமே வேலை செய்யப் போகிற இடத்தில் வேலை வேண்டுமென்றால் ஆண்களோடு படுத்து தான் பெண்கள் வேலை செய்கிறார்கள் என்று சொன்னாரா இல்லையா? முதலில் அந்த ஆணையம் அங்கே போய் அவரை கைது செய்யுங்கள்.” 
 
என தெரிவித்திருக்கிறார் இன்னும் ஆவேசமாக பேசிய மன்சூர் அலிகான் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.