காதல் - தி கோர்: ரிலீசுக்கு முன்பாக மம்மூட்டி - ஜோதிகாவின் முதல் மலையாள படத்தில் இருந்து வந்த சர்ப்ரைஸ் டீசர் இதோ!

மம்மூட்டி - ஜோதிகாவின் காதல் - தி கோர் பட ப்ரீ ரிலீஸ் டீசர் வெளியீடு,mammootty jyotika in kaathal the core movie pre release teaser out now | Galatta

நடிகர் மம்மூட்டி மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து நடித்த மலையாள படமான காதல் - தி கோர் படத்தின் ப்ரீ ரிலீஸ் டீசர் வெளியானது. மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக விளங்கும் நடிகர் மம்மூட்டி உடன் இணைந்து முதல்முறையாக நடிகை ஜோதிகா கதையின் நாயகியாக நடித்திருக்கும் மலையாள படமான காதல் - தி கோர் திரைப்படம் வருகிற நவம்பர் 23ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே ரிலீசுக்கு இன்னும் இரண்டு நாட்களில் இருக்கும் இந்த சூழ்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் காதல் - தி கோர் படத்தின் ப்ரீ ரிலீஸ் டீசர் வெளியானது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 

முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜோ பேபி காதல் - தி கோர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மம்மூட்டி மற்றும் ஜோதிகா உடன் இணைந்து லாலு அலெக்ஸ், முத்துமணி, சின்னு சாந்தினி, சுதி கோழிக்கோடு, அனகா அக்கு உள்ளிட்டோரும் காதல் - தி கோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் சக்கரியா இருவரும் இணைந்து காதல் - தி கோர் திரைப்படத்தில் கதை திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளனர். ஷாலு.K.தாமஸ் ஒளிப்பதிவில், பிரான்சிஸ் லூயிஸ் படத்தொகுப்பு செய்ய, காதல் - தி கோர் படத்திற்கு மேத்யூஸ் புலிக்கண் இசையமைத்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி 2022 நவம்பர் மாதத்திற்குள் காதல் - தி கோர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த காதல் - தி கோர் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனது முதல் மலையாள படமாக ஜோதிகா களமிறங்கி இருக்கும் இந்த காதல் - தி கோர் திரைப்படம் நடிகை ஜோதிகாவின் திரை பயணத்திலேயே இல்லாத அளவிற்கு மிகவும் அழுத்தமான கதைக்களம் கொண்ட எதார்த்தமான ஒரு திரைப்படமாக இருக்கும் என டிரைலரில் தெளிவாக தெரிகிறது. இதனிடையே இன்று நவம்பர் 21ஆம் தேதி வெளி வந்திருக்கும் திரைப்படத்தின் புதிய ப்ரீ ரிலீஸ் ரிலீஸ் டீசரும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் மம்மூட்டி அவர்களை பொறுத்த வரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு விறுவிறுப்பான திரில்லர் படமாக அவரது நடிப்பில் வெளிவந்த கண்ணூர் ஸ்குவாட் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து யாத்ரா 2, டர்போ, பிரம்மயுகம், பஸூகா ஆகிய படங்கள் அடுத்தடுத்து மம்முட்டி நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன. 36 வயதினிலே படத்தில் நடித்து சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி, தொடர்ந்து கதாநாயகியை முன்னிறுத்தும் கதை களங்கள் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிற ஜோதிகா  முன்னணிக் கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட்டில் கம்பேக் கொடுத்திருக்கும் பயோபிக் திரைப்படமாக உருவாகி இருக்கும் “ஸ்ரீ” திரைப்படம் வரும் 2024ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் உடன் இணைந்து மற்றொரு பாலிவுட் படமாக பிளாக் மேஜிக் எனும் படத்தில் நடித்து வருகிறார்.