80'S பில்டப்: கமல் ரசிகராக காதல் சவால் விடும் சந்தானம்… ரெட்ரோ காமெடி ட்ரீட்டாக வரும் புதிய படத்தின் கலகலப்பான SNEAK PEEK வீடியோ இதோ!

சந்தானத்தின் 80'S பில்டப் பட SNEAK PEEK வீடியோ வெளியீடு,santhanam in 80s buildup movie sneak peek video out now | Galatta

அடுத்தடுத்து கலக்கலான காமெடி படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் சந்தானத்தின் அடுத்த கலக்கல் காமெடி ட்ரீட்டாக வெளிவர இருக்கும் சந்தானத்தின் 80s பில்டப் திரைப்படத்தின் SNEAK PEEK வீடியோ வெளியானது. ரிலீசுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் இந்த கலகலப்பான SNEAK PEEK வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இழவு வீட்டிற்கு வரும் நாயகியை பார்த்தவுடன் காதலில் விழும் சந்தானம் காதலித்தால் இந்த பெண்ணைத்தான் காதலிப்பேன் என நண்பர்களிடம் கூறுகிறார். அதுவே அடுத்த சவாலாக மாறுகிறது. அந்த இழவு முடிவதற்குள் நாயகியை "I LOVE YOU" சொல்ல வைப்பேன் என காதல் மன்னன் கமல்ஹாசனின் ரசிகராக சந்தானம் சவால் விடுகிறார். கலகலப்பான அந்த SNEAK PEEK வீடியோ இதோ...

 

பிரபுதேவாவின் குலேபகாவலி, ஜோதிகாவின் ஜாக்பாட் மற்றும் காஜல் அகர்வாலின் கோஸ்டி என தனக்கென தனிப்பாடியில் பக்கா என்டர்டெய்னிங் திரைப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வரும் இயக்குனர் S.கல்யாண் இயக்கத்தில் அடுத்த கலக்கல் என்டர்டெய்னிங் படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் தான் 80’S பில்டப்.  முதல்முறையாக இயக்குனர் S.கல்யாண் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்திருக்கும் இந்த 80’S பில்டப் திரைப்படத்தில் இணைந்து ராதிகா ப்ரீத்தி கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, மன்சூர் அலிகான், டைகர் தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜேக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவில் MS.பாரதி படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த பில்டப் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சமீபத்தில் சந்தானத்தின் 80's பில்டப் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் கலாய் என்ற பெயரில் வந்த ஃபர்ஸ்ட் லுக் வீடியோ ரசிகர்கள் இடையே பெரும் ஆர்வத்தை தூண்டிய நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் பெரும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

வித்தியாசமான ரெட்ரோ காமெடி படமாக தயாராகி இருக்கும் இந்த 80's பில்டப் படமும் சந்தானத்திற்கு மற்றொரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற நவம்பர் 23ஆம் தேதி 80’S பில்டப் திரைப்படம் உலகம் முழுக்க மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக பட குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக நகைச்சுவை மையப்படுத்திய திரைப்படங்களில் தொடர்ச்சியாக கதையின் நாயகனாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்திலிருந்து கதாநாயகனாக தனது புதிய பாதையை தொடங்கிய நடிகர் சந்தானம் தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, A1, டக்கால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குளுகுளு மற்றும் ஏஜென்ட் கண்ணாயிரம் என வரிசையாக கலக்கலான படங்களை கொடுத்து வருகிறார். இந்த வரிசையில் இந்த 2023 ஆண்டில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் பக்கா ஹாரர் காமெடி ட்ரீட்டாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளிவந்த கிக் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் N.ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள புதிய படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.