தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன்.TR தனது வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் கோகுல் இயக்கத்தில் “கொரோனா குமார்” படத்தில் நடிக்க இருக்கிறார். முன்னதாக அறிவிக்கப்பட்டபடி விரைவில் வெந்து தணிந்தது காடு படத்தின் 2வது பாகமும் சிலம்பரசன்.TR நடிப்பில் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொண்ட தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகரான கௌதம் கார்த்திக் நடிப்பில் தற்போது “16 ஆகஸ்ட் 1947” திரைப்படம் தயாராகி வருகிறது.இதனிடையே இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பத்து தல. 

முன்னதாக கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்துள்ளார். 

கடந்த டிசம்பர் 14ஆம் தேதி பத்து தல படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையாத நிலையில் ரிலீஸ் தள்ளிப்போனது. எனவே அடுத்த ஆண்டு(2023) மார்ச் மாதத்தில் பத்து தல படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகர் கௌதம் கார்த்திக் பத்து தல திரைப்படத்தில் தனது பகுதி டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் டப்பிங் ஸ்டுடியோவில் இயக்குனர் மற்றும் படக்குழுவினரோடு இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். கௌதம் கார்த்திக்கின் அந்தப் பதிவு மற்றும் புகைப்படங்கள் இதோ