திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் 100வது பிறந்தநாள் இன்று தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவாறாக திகழும் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் இன்று அவரை நினைவு கூறுகிறது கலாட்டா குழுமம். தமிழின தலைவர், தன்னிங்கரற்ற மனிதர், அரசியல் ஆளுமை என்று வரலாறு ஒரு புறம் இவரை பற்றி பல சாதனைகளை எடுத்துரைக்கும் அதே நேரத்தில் இன்று வெகுஜன ஊடகங்களில் மிக சக்தி வாய்ந்த ஊடகமாக உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சினிமாவில் கலைஞர் கருணாநிதி அவர்களின் பங்கு குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு

தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு ஊடகாமாகவும் கலை சார்ந்த விஷயமாக மட்டுமின்றி அது ஒரு உணர்வாக பார்க்கப் பட்டு வருகிறது. அதில் இடம் பெரும் காட்சிகள் வாழ்வியலாகவும் ஹீரோ தலைவராகவும் பார்க்கப் படுகிறது. அந்த சினிமாவினை இன்று வியாபார நோக்கில் பலர் அணுகி வருகின்றனர். ஆனால் சரியான வழியில் சரியான நோக்கத்தில் சினிமாவின் உண்மையான சக்தியை அறிந்து அதனை சரியாக முறையாக பயன்படுத்திய பெருமை கலைஞர் கருணாநிதிக்கே சேரும். தன் சிறு வயதிலிருந்தே தமிழ் மீது இருந்த அதிக ஆர்வத்தினால் தன் வாழ்நாளின் ஆரம்ப காலத்திலிருந்து ஏராளமான கவிதைகள், கட்டுரைகள் எழுதி தன் எழுத்து திறமையினை வளர்த்து பின்ப்ப் நாடங்களிலும் திரைப்படங்களிலும் திரைக்கதை எழுத வந்தார் கருணாநிதி.

எழுதுவது என்றால் இயற்கை, கற்பனை கதை, கட்டுக் கதை என்று இல்லாமல் சமூக பிரச்சனைகளை மக்கள் வாழ்வியலுடன் இணைத்து மிக அழுத்தமான வார்த்தைகளுடன் எழுதி வந்தவர். அவர் எழுத்தில் உருவான திரைப்படங்களின் மூலம் இன்றும் தமிழ் நாட்டில் திராவிட சிந்தனைகள் வேரூன்றி இருக்க செய்துள்ளார். களப்பணி ஒருபுறம் இருந்தாலும் காலத்திற்கே செல்லாமல் வெகுஜன ஊடங்கங்களில் தன் எழுத்தை முழுமையாக பயன்படுத்தி ஒரு புரட்சியை செய்துள்ளார்.

கடந்த 1947 ல் எம் ஜி இராமசந்திரன் நடிப்பில் உருவான ராஜகுமாரி திரைப்படத்தில் திரைக்கதையாசிரியராக முதல் முறையாக திரைத்துறையில் அறிமுகமானார் கலைஞர் கருணாநிதி. இந்த திரைப்படமே கருணாநிதி எம்ஜி ஆர் இருவருக்குமே திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். இப்படத்தின் மூலமே இருவருக்குமான நட்புறவு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து பல படங்களை எழுதி வந்த கலைஞர் 1952 ல் சமூதாய பிரச்சனையை பேசி மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பேசி மிக அழுத்தமான திரைப்படமான பராசக்தி திரைப்படத்தை எழுதினார். முந்தைய தமிழ் திரைப்படங்கள் இதிகாச கதைகளையும் மூட நம்பிக்கையை பரப்பும் மாயஜால திரைப்படங்களை இயக்கி அதில் 20 பாடல்களை வைத்து 4 மணி நேரத்தை ஒட்டி விடும் . அந்த நிலையில் பராசக்தி திரைப்படத்தையடுத்து மாற்றி கொடுத்தவர். காலம் கடந்தாலும் இன்றும் கலைஞரின் பராசக்தி திரைப்படம் அனைத்து சூழ்நிலைக்கும் பொருந்து போகும் அதனாலே இன்றும் ரசிகர்கள் அப்படத்தினை கொண்டாடி வருகின்றனர். அதன்படி அவரது எழுத்தில் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், குறவஞ்சி, மாடி வீட்டு ஏழை, மணி மகுடம், மலை கள்ளன், மனோகரா, பணம், பூம்புகார் போன்ற பல முக்கிய திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்.

தீண்டாமை, விதவைகள, மூட நம்பிக்கை கொடுமைகள், சுயமரியாதை திருமணம் என்று பல விஷயங்களை தன் எழுத்தில் வைத்து அதனை திரைக்காவியமாக மாற்றி மக்களிடையே அழுத்தமான சிந்தனைகளை பதிய செய்தார். அதை தொடர்ந்து இதிகாசங்கள், கற்பனை கதைகள், கடவுள் அடிப்படை கதைகள் என்று தமிழ் சினிமா இருந்த காலத்தில் மக்கள் பிரச்சனை, வாழ்வியல் சிக்கல்கள், உறவு, சமூக கடமைகள் என்று தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி புரட்சி செய்தவர்களில் முக்கியமானவராக திகழ்கிறார் கலைஞர். மேலும் திரைப்படங்களில் பேச்சு வழக்கு தமிழ் மொழியை சினிமாவில் அறிமுகப்படுத்தி பெரும் மாற்றத்தை உருவாக்கினார்.

திரைப்படங்களுக்கு தடை கோரி பல சர்ச்சைகள் இன்று நிகழ்கிறது. ஆனால் கலைஞர் கருணாநிதி திரைப்படங்களுக்கு அன்றே பல பிரச்சனைகள் தணிக்கைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இதில் அதிக சர்ச்சைக்குள்ளான திரைப்படம் பாராசக்தி. தடைகளை தாண்டி பராசக்தி வரலாறாக மாறியது. திரைத்துறையில் கதையாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் தன் எழுத்தை ஒவ்வொரு துறையிலும் பரிணமித்து காலத்தை அழிக்க முடியாத காவியங்களை கொடுத்தவர் கலைஞர். தணிக்கை மட்டும் இல்லையென்றால் திரைப்படங்கள் மூலம் திராவிட நாட்டை எளிதாக பெற்று கொடுத்து விடுவேன் என்று அறிஞர் அண்ணா சொல்லியதை செய்ய துவங்கியதை கலைஞர் கருணாநிதி செய்து அதற்கான பாதையை வகுத்து சென்றுள்ளார். மாபெரும் திரைக்கலைஞர் கருணாநிதி அவர்களின் இருப்பு பல நூறு ஆண்டு கடந்தும் அவரது தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் மூலம் நீடித்து நிற்கும் என்று சொன்னால் மிகையாகாது.