'சந்திரமுகி 2' படத்தையடுத்து தமிழில் மிக முக்கியமான திரைப்படத்தில் ஆஸ்கார் இசையமைப்பாளர் கீரவாணி.. - வைரலாகும் அப்டேட் இதோ..

ஜெண்டில்மேன் 2 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் எம் எம் கீரவாணி விவரம் உள்ளே - MM Keeravani will score music for KT kunjumon Gentleman 2 | Galatta

இந்திய சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளர் பிரம்மாண்டத்தை மேலும் பிரம்மிபூட்ட கூடிய இசைக்கு சொந்தக்காரர் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி. 1990 ல் தெலுங்கு திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தமிழில் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் திரைப்படமான அழகன் திரைப்படம் மூலம் அறிமுகமானார் கீரவாணி. பின் தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் பல முக்கியமான திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார். அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து  இந்திய சினிமாவில் மிக முக்கியமான இசையமைப்பாளரானார். அதன்படி கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இடையே தெலுங்கு திரையுலகில் மும்முரமாக கீரவாணி இருக்க தமிழில் இடைவெளி எற்பட்டது.

பின்னர் கடந்த 2015 மற்றும் 2017 ல் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகி பான் இந்திய அளவு வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்திற்கு இசையமைத்தார் இசையமைப்பாளர் கீரவாணி. இப்படத்தின் மூலம் மீண்டும் எம் எம் கீரவாணி இந்திய முழுவதும் பரவலாக பேசபட்டார். பிரம்மாண்டத்தில் பிரம்மாண்டமாய் கீரவாணி இசை இருந்தததால் ரசிகர்கள் அவருக்கு மிகப்பெரிய ஆதரவினை கொடுத்தனர்.

அப்படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கு இசையமைத்து உலகளவில் கவனம் பெற்றார் மேலும் உயரிய விருதான ஆஸ்கார் விருதினையும் சிறந்த பாடலுக்காக வென்றார் எம் எம் கீரவாணி. தற்போது அவர் தமிழில் சந்திரமுகி திரைப்படத்திற்கும் மற்றும் பல தெலுங்கு திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1993 ல் வெளியாகி ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமான ‘ஜெண்டில் மேன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இயக்க அப்படத்தின் தயாரிப்பாளர்  KT குஞ்சுமோன் அறிவித்திருந்தார். அதன்படி ஜெண்டில் மேன் 2  திரைப்படத்தினை KT குஞ்சுமோன் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தினை இயக்குனர் இயக்குநர் A.கோகுல் கிருஷ்ணா இயக்க கதாநயாகனாக சேத்தன் சீனு நடிக்க கதாநாயாகிகளாக நயன்தாரா சக்ரவர்த்தி மற்றும் ப்ரியா லால் நடிக்கின்றனர். முன்னதாக இந்தப்படத்திற்கு கலை இயக்குநர் தோட்டா தரணி கலை இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஜெண்டில் மேன் 2 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற எம் எம் கீராவாணி இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தயாரிப்பாளர் KT குஞ்சுமோன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த தகவல் இணையத்தில் ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

 

Academy award winning music director @mmkeeravaani to kick-start his composing for mega producer @KT_Kunjumon's #Gentleman2 soon. He is very much impressed with the script naration of director @agoks @film_gentleman#thottatharani @johnsoncinepro @ajay_64403@MovieBond1 pic.twitter.com/BKobu0aewi

— C K Ajaykumar,PRO (@ajay_64403) June 3, 2023

 

உலக தரத்தில் உருவாகும் சியான் விக்ரமின் தங்கலான்.. அப்டேட் கொடுத்த இயக்குனர் பா ரஞ்சித் – விவரம் உள்ளே..
சினிமா

உலக தரத்தில் உருவாகும் சியான் விக்ரமின் தங்கலான்.. அப்டேட் கொடுத்த இயக்குனர் பா ரஞ்சித் – விவரம் உள்ளே..

மேடையில் பிரபல பாடகி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சியை ஏற்படுத்திய பரபரப்பு சம்பவம் – பின்னணி இதோ..
சினிமா

மேடையில் பிரபல பாடகி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சியை ஏற்படுத்திய பரபரப்பு சம்பவம் – பின்னணி இதோ..

“அவர் நம் இதயங்களை வருடுகிறார்” இளையராஜாவிற்கு புகழாரம் சூட்டிய முதல்வர் மு.க ஸ்டாலின்..! - வைரல் பதிவு இதோ.
சினிமா

“அவர் நம் இதயங்களை வருடுகிறார்” இளையராஜாவிற்கு புகழாரம் சூட்டிய முதல்வர் மு.க ஸ்டாலின்..! - வைரல் பதிவு இதோ.