இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் மிகச்சிறந்த சிறந்த இயக்குனராக தொடர்ந்து தரமான திரைப்படங்களை அளித்துவரும் இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக முதல்முறை நடிகர் சூர்யாவுடன் வாடிவாசல் திரைப்படத்தில் இணைகிறார். விரைவில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் தனது விடுதலை திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். 

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி தயாராகும் விடுதலை திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

RS இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில், R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசைஞானி இளையராஜா இசையமைக்கும் விடுதலை திரைப்படத்திற்கு பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனிடையே முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மேன் சுரேஷ்  உயிரிழந்தார். படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி ஸ்டண்ட்மேன் உயிரிழந்தது படக்குழுவினரையும் தமிழ் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இந்நிலையில் ஸ்டண்ட் மேன் சுரேஷ் அவர்களின் மரங்க குறித்து தயாரிப்பாளர் எல்ரட்குமார் அவர்கள் தனது இரங்கல் அற்க்கையை வெளியிட்டுள்ளார். “விடுதலை திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பின் போது எங்களது அன்பிற்குரிய ஸ்டண்ட் மேன் சுரேஷ் அவர்கள் இறந்துவிட்டார் என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம். ஆம்புலன்ஸ் உதவியோடு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டும் ஒரு தூய்மையான ஆன்மாவை இழந்துவிட்டோம். இது எங்களது படக்குழுவினருக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நெஞ்சை விட்டு நீங்காத துயரம் கொடுத்திருக்கிறது. சுரேஷ் அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் எல்ரட் குமார் அவர்களின் அந்த அறிக்கை இதோ…