தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் கடைசியாக தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் வெளியானது. நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்த ஆக்சன் திரில்லர் வெப் சீரிஸாக SonyLIV தளத்தில் வெளிவந்த தமிழ் ராக்கர்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னதாக இவரது இயக்கத்தில் அருண் விஜய் நடித்த பார்டர் திரைப்படம் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில் அடுத்ததாக சப்தம் எனும் த்ரில்லர் திரைப்படத்தை அறிவழகன் இயக்குகிறார். இதனிடையே இயக்குனர் அறிவழகனின் முதல் படமான ஈரம் படத்திற்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இயக்குனர் அறிவழகன் - நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் கூட்டணி இணைகிறது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படம் வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டானதோடு அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. அந்த வகையில் மீண்டும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரில்லர் படமாக தயாராகும் சப்தம் திரைப்படத்தை 7G ஃபிலிம்ஸ் மற்றும் ஆல்பா ஃப்ரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில், சாபு ஜோசப் VJ படத்தொகுப்பு செய்யும் சப்தம் திரைப்படத்திற்கு பாடலாசிரியர் விவேகா பாடல்களை எழுதுகிறார். ஈரம் திரைப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டான நிலையில், தமன் இசையில் வெளிவரும் சப்தம் திரைப்படத்தின் பாடல்கள் மீது தற்போது எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் சப்தம் திரைப்படத்தை அறிவிக்கும் வகையில் படக்குழுவினர் அட்டகாசமான அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ…