மலையாள திரையுலகின் பிரபல இயக்குனரும், தமிழில் ‘காஞ்சிவரம்’, ‘லேசா லேசா’. ‘கோபுர வாசலிலே’ ‘நிமிர்’, நவரசா’ஆகிய படங்களை இயக்கிய இயக்குனருமான இயக்குனர் பிரியதர்ஷன். இவர் தமிழ் மலையாளம், இந்தி ஆகிய மொழி திரையுலகில் கொடிக்கட்டி பறந்த மிகப்பெரிய ஒரு பிரபலம். இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு நடிகை லிஸியை திருமணம் செய்து கொண்டார். லிஸி தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர். உலகநாயகனின் விக்ரம் திரைப்படத்தின் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது. பின் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2016 ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இத்தம்பதியினருக்கு சித்தார்த் என்ற மகனும் கல்யாணி என்ற மகனும் உள்ளனர். கல்யாணி தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் ‘ஹீரோ’,’மாநாடு’ ஆகிய படங்களிலும் ‘புத்தம் புது காலை’ என்ற இணைய தொடரிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘ஹிருதயம்’ படம் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

தற்போது இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸி தம்பதியினரின் மகனான சித்தார்த்தின் திருமணம் வெள்ளி கிழமை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. பத்து பேர் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமண நிகழ்வு மகிழ்ச்சியாக நிறைவடைந்தது. இந்த திருமணத்தில் விவாகரத்து பெற்ற தம்பதியினர் பிரியதர்ஷன் மற்றும் லிஸி மகனுக்காக ஒன்றாக கலந்து கொண்டு சித்தார்த் மற்றும் மரிலின் மணமக்களை வாழ்த்தினர். இதனையடுத்து நடிகை கல்யாணி பிரியதர்ஷன் திருமணத்தில் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இதனையடுத்து திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சித்தார்த் பிரியதர்ஷன் Special Visual Effects படிப்பை அமெரிக்காவில் முடித்தவர். திறனை கற்று தேர்ந்து தனது தந்தை படங்களுக்கும் மற்ற படங்களுக்கும் பணியாற்றியவர். இவர் ஆரபிகடலினின்டே சிம்மம் திரைப்படத்திற்காக சிறந்த VFX க்கான தேசிய விருதை பெற்றவர். பெரிதும் ஊடகங்கள் முன் வராதவர் சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது.