“பள்ளி கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும்”.. ரசிகர் கேள்விக்கு வெற்றிமாறனின் சுவாரஸ்யமான வைரல் பதில் இதோ..

பள்ளிகளில் சாதி சான்றிதழ் பற்றி இயக்குனர் வெற்றிமாறன் - Vetrimaran about Community Certificate | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர் வெற்றி மாறன். தமிழ் சினிமாவில் பெருமையை இந்திய சினிமா‌ திரையுலகின் பார்வைக்கு தன் படைப்பின் மூலம் கொண்டு சேர்த்தவர். தான் எடுத்த திரைப்படம் மூலம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அதிகளவு வரவேற்பு பெற்றவர் இயக்குனர் வெற்றிமாறன்.முதல் படத்திலிருந்து சமீபத்திய திரைப்படம் வரை ரசிகர்களையும் வர்த்தக மார்கெட்டையும் வெற்றி மாறன் திரைப்படம் கைவிட்டதில்லை. மேலும் வெற்றிமாறன் தமிழ் திரைப்படங்களில் சமூக அக்கறையை கையாண்டு வரும் சந்ததியினருக்கு நல்ல திரைப்படங்கள் கொடுக்க உழைத்து கொண்டிருப்பவர் திரைத்துறையில் மட்டுமல்லாமல் திரைக்கு வெளியேயும் சமூக பார்வையுடன் பல பிரச்சனைகளை அணுகி அதற்கு குரல் கொடுத்தும் வருகிறார். இந்நிலையில் சென்னையில் நடந்த தமிழ் கனவு, தமிழ் மரபு‌ மற்றும் பண்பாட்டு பரப்புரை என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன், சாதி சான்றிதழ் குறித்த பார்வையாளர் கேள்விக்கு .

அவர் இவ்வாறு பதிலளித்தார்,

“நான் என் பசங்களுக்கு 'No Caste' அப்படி னு சான்றிதழ் வாங்க முயற்சி செஞ்சேன். கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாங்க.. அப்படிலாம் கொடுக்க முடியாது னு சொல்லிட்டாங்க.. கோர்ட்டுக்கு போனேன். அங்கும் நீங்க எதாவது ஒரு சாதியை குறிப்படனும் னு சொன்னாங்க..இல்லனா தரமாட்டோம் னு  அதேதான் சொன்னாங்க.. நான் பள்ளி கூடத்துல சாதி சான்றிதழ் கொடுக்காம இருக்க நிறைய வேலைகள் பார்த்துட்டு இருக்கேன். பள்ளி கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது கண்டிப்பா நிறுத்தனும்னு தான் நான் நினைக்கிறேன். அதாவது யாருக்கு தேவையில்லையோ அவங்களுக்கு சொல்றேன். எனக்கு தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் சாதி சான்றிதழ் சிலருக்கான உரிமையை வாங்கி தர கூடிய இடத்துல இருக்கு. அந்த நேரத்து அத கொடுக்கலாம். சமூக நீதிக்கு சில இடங்களில் அதை வைத்தாக வேண்டுமென்றால் வைக்கலாம். எனக்கு அது தேவையில்லை‌. நான் எனக்கு வேண்டாம்னு சொல்றேன். ஒருத்தர் சாதி வேண்டாம் னு சொல்லக்கூடிய உரிமை அதற்கான வாய்ப்பு இருக்கனும்னு நினைக்கிறேன்.சமூக நீதிக்கு கண்டிப்பா அது தேவைபடுது.அதனால சாதி சான்றிதழ் பொதுவா எல்லாரும் தூக்கி போட்ற‌ முடியாது.." என்று குறிப்பிட்டார்.

மேலும்  நடிகர்களை தலைவர் அழைப்பது குறித்து பேசிய அவர்,

"நடிகர்களை 'தலைவர்' அப்படினு சொல்றது எனக்கு வருத்தமா இருக்கும். அது பண்ணாம இருக்கலாம்.‌ முன்னாடி இருந்ததா நடிகர்கள் அரசியலோட தொடர்புடையவராக இருந்தவங்க.‌ அதனால அவங்கள தலைவர் னு கூப்டுறது சரியா இருந்தது.ஆனா இன்னிக்கு அப்படி இல்ல. அதனால அப்படி கூப்டுறது எனக்கு கஷ்டமா இருக்கு.." என்று குறிப்பிட்டார்.

‘காவலன்’ முதல் ‘தளபதி 67’ வரை..  பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் கைப்பற்றிய தளபதி விஜய் திரைப்படங்களின் பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

‘காவலன்’ முதல் ‘தளபதி 67’ வரை.. பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் கைப்பற்றிய தளபதி விஜய் திரைப்படங்களின் பட்டியல் இதோ..

‘கில்லி’ முதல் ‘தளபதி 67’ வரை... Nostalgic feel கொடுத்த திரிஷாவின் பதிவு.. - உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

‘கில்லி’ முதல் ‘தளபதி 67’ வரை... Nostalgic feel கொடுத்த திரிஷாவின் பதிவு.. - உற்சாகத்தில் ரசிகர்கள்..

சூர்யா - சிவா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சூர்யா 42’ அப்டேட் இதோ.. வைரலாகும் பதிவு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

சூர்யா - சிவா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சூர்யா 42’ அப்டேட் இதோ.. வைரலாகும் பதிவு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..