“இழந்த சிரிப்பும் இதய துடிப்பும் இங்கே..” Surprise ஆக வெளியான Soul of Varisu - உற்சாகத்தில் ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ சாங் இதோ..

Soul of varisu வீடியோ சாங் வெளியிட்ட படக்குழு - Soul of varisu video song is out now | Galatta

இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’. தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் உலகெங்கிலும் வெளியாகி 25 நாட்களில் வசூல் ரீதியாக பல சாதனை பெற்று வருகிறது. இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் குடும்ப உணர்வுகளை மையப்படுத்தி வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்களின் பேராதரவோடு பல இடங்களில் அமோக வரவேற்பை பெற்று இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படம் என்ற பெருமையை கொண்டுள்ளது. தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் தயாரிப்பில் வெளிவந்த வாரிசு படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கின்றது. விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஜெய சுதா, ஷ்யாம்,சங்கீதா,சம்யுக்தா, ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ் சதீஷ், விடி வி கணேஷ், உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

குடும்ப உணர்வுகளை படம் சொல்லியிருப்பதால் இன்னும் பல திரையரங்குகளில் வாரிசு திரைப்படம் ஓடி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.படத்தில் வெளியான பாடல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இன்னும் துள்ளல் போட வைக்கின்றது. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் soul of varisu என்கிற பாடல்  மக்கள் மனதை மேன்மைபடுத்தி ரசிக்க வைக்கும் படி அமைந்திருப்பதால் பாடல் வெளியான நாள் முதல் இன்று வரை இந்த பாடல் ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகிறது. பாடலாசிரியர் விவேக் வரிகளில் பிரபல பாடகர் சித்ரா பாடியிருக்கும் இந்த பாடல் தற்போது 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலின் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டு உள்ளது.

ஜெயசுதாவின் உணர்ச்சி பொங்கும் நடிப்புடன் தளபதி விஜய் திரையில் தோன்றும் அந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது மாத ஆரம்பத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் அப்டேட் குவிந்து வருகின்றது,. இந்நிலையில் விஜய் குறித்து மேலும் ஒரு செய்தி ரசிகர்களை மேலும் குதூகலப்படுத்தியுள்ளது.

“பள்ளி கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும்”.. ரசிகர் கேள்விக்கு வெற்றிமாறனின் சுவாரஸ்யமான வைரல் பதில் இதோ..
சினிமா

“பள்ளி கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும்”.. ரசிகர் கேள்விக்கு வெற்றிமாறனின் சுவாரஸ்யமான வைரல் பதில் இதோ..

தளபதி ரசிகர்களுக்கு Double Treat கொடுத்த ‘லியோ’ படக்குழு.. ரசிகர்கள் கொண்டாட்டம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..
சினிமா

தளபதி ரசிகர்களுக்கு Double Treat கொடுத்த ‘லியோ’ படக்குழு.. ரசிகர்கள் கொண்டாட்டம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..

‘தளபதி 67’ வெறித்தனமான போஸ்டருடன் வேற லெவல் அப்டேட்..- ரசிகர்களின் ஆரவாரத்துடன் லோகேஷ் கனகராஜ் பதிவு Trending..
சினிமா

‘தளபதி 67’ வெறித்தனமான போஸ்டருடன் வேற லெவல் அப்டேட்..- ரசிகர்களின் ஆரவாரத்துடன் லோகேஷ் கனகராஜ் பதிவு Trending..