“அப்டேட் கேக்காம இருக்க நீங்க இப்படி பண்ணிருக்கிங்க”.. லியோ பட தயாரிப்பாளரிடம் பிரபல இயக்குனர்.. – உற்சாகத்தில் இயக்குனர் பகிர்ந்த பதிவு வைரல்..

லியோ பட டைட்டில் விவகாரம் குறித்து இயக்குனர் ரத்தின குமார் - Director Rathnakumar about Leo title announcement Campaign | Galatta

பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ திரைப்படத்தின் டைட்டில் வீடியோ ‘பிலடி ஸ்வீட் என்ற வசனத்துடன் வெளியாகி நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திற்கு ‘பீஸ்ட்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக வெளிவரவிருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19 ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், ஆக்ஷன்கிங் அர்ஜுன், மிஸ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மேத்திவ் தாமஸ் மற்றும் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

நேற்று வெளியான தளபதி 67 படத்தின் லியோ என்ற தலைப்பு இணையத்தில் தீயாய் பரவி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக தளபதி 67 படக்குழுவினர் தொடர்ந்து படம் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட்டுகளை பார்த்தபடி இருந்தனர். ஜனவரி 31 நாளிலிருந்து இன்று வரை படக்குழு ரசிகர்களை அப்டேட்டுகள் மூலம் திக்கு முக்காட வைத்துள்ளனர். இந்த அப்டேட்டுகளில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் என்றால் அது படத்தின் டைட்டில் அறிவிப்பு தான். படத்தின் டைட்டில் பிப் 3 ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இதனையடுத்து பட தலைப்பை ரசிகர்கள் இதுவாகத்தான் இருக்கும் என்று இணையத்தில் தீப்பறக்க வைத்தனர். அதன் படி படத்தின் தலைப்பு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ‘லியோ’ என்றே அமைந்தது. பின்னர் ரசிகர்கள் இணையத்தில் டைட்டில் வீடியோவை வைரலாக்கி வந்தனர். இந்நிலையில் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜகதீஷ் டைட்டில் வீடியோவுடன், “வெகு நேரமாக இந்த ஆரவாரத்தை அடக்க முடியவில்லை.” என்று குறிப்பிட்டு பகிர்ந்தார். இந்த பதிவை இயக்குனரும் லியோ படத்தின் வசன உதவியாளருமான  ரத்தினா குமார்  அவர்கள் பகிர்ந்து அதனுடன், “படத்தின் தலைப்பு வெளியீடு வரை அதை மறைத்து வைப்பது சுலபமான காரியம் இல்லை.. அற்புதமான வேலை ஜகதீஸ் நண்பா.. அடுத்த ஐந்து மாதம் அப்டேட் கேக்கவே கூடாதுன்னு சொல்லாம சொல்லி இருக்கீங்க.. பிரமாதமான பிரச்சாரம்..” என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து இவரது பதிவு ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.   

It's not easy to protect the Title till the release. Stupendous work @Jagadishbliss bro 👏👏👍👍. Adutha anju maasathuku update kekave koodathu nu sollaama solli irukkenga😊. Terrific campaign so far 💥🔥#Leo https://t.co/71OgAOzkyF

— Rathna kumar (@MrRathna) February 3, 2023

இயக்குனர் ரத்தினா குமார்  தமிழ் சினிமாவில் அதிகம் கவனம் பெற்ற படங்களான ‘மேயாத மான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கியவர். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் குலுகுலு திரைப்படத்தை இயக்கினார். இவர் இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களான ‘மாஸ்டர், ‘விக்ரம் ஆகிய படங்களுக்கு இணை எழுத்தாளராகவும் இணை வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர். தர்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்திலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தளபதி 67’ வெறித்தனமான போஸ்டருடன் வேற லெவல் அப்டேட்..- ரசிகர்களின் ஆரவாரத்துடன் லோகேஷ் கனகராஜ் பதிவு Trending..
சினிமா

‘தளபதி 67’ வெறித்தனமான போஸ்டருடன் வேற லெவல் அப்டேட்..- ரசிகர்களின் ஆரவாரத்துடன் லோகேஷ் கனகராஜ் பதிவு Trending..

‘காவலன்’ முதல் ‘தளபதி 67’ வரை..  பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் கைப்பற்றிய தளபதி விஜய் திரைப்படங்களின் பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

‘காவலன்’ முதல் ‘தளபதி 67’ வரை.. பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் கைப்பற்றிய தளபதி விஜய் திரைப்படங்களின் பட்டியல் இதோ..

‘கில்லி’ முதல் ‘தளபதி 67’ வரை... Nostalgic feel கொடுத்த திரிஷாவின் பதிவு.. - உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

‘கில்லி’ முதல் ‘தளபதி 67’ வரை... Nostalgic feel கொடுத்த திரிஷாவின் பதிவு.. - உற்சாகத்தில் ரசிகர்கள்..