பல கோடி ரசிகர்களின் ஃபேவரட்டான ஹீரோயின்களில் ஒருவராகவும் சிறந்த நடிகையாகவும் திகழும் நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் யசோதா வித்தியாசமான ஆக்சன் திரில்லர் படமாகவும் பேன் இந்தியா படமாகவும் வெளிவந்த யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்துள்ள சமந்தா ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னர் படமாக தயாராகும் குஷி திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். தொடர்ந்து ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா - ரிச்சர்ட மேடன் நடிப்பில் தயாராகியுள்ள சைட்டாடெல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனாக தயாராகும் சைட்டாடெல் வெப் சீரிஸில் ஃபேமிலி மேன் வெப் சீரிஸ்க்கு பிறகு மீண்டும் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி கே இயக்கத்தில் சமந்தா தற்போது நடித்து வருகிறார். தற்போது முதல் முறையாக ஹாலிவுட்டில் களமிறங்கியுள்ள நடிகை சமந்தா ஹாலிவுட் பிரபல இயக்குனர் ஃபிலிப் ஜான் இயக்கத்தில் அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் எனும் ஆங்கில படத்திலும் நடித்துள்ளார்.

இதனிடையே இதிகாச கதாபாத்திரமான சகுந்தலா கதாபாத்திரத்தை மையப்படுத்தி இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள திரைப்படம் சாகுந்தலம். குணா டீம் ஒர்க்ஸ் சார்பில், தயாரிப்பாளர் நீலிமா குணா தெலுங்கில் தயாரித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தில் நடிகை சமந்தா சகுந்தலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தேவ் மோகன், மோகன் பாபு, அதிதி பாலன், பிரகாஷ் ராஜ், கௌதமி ஆகியோர் சாகுந்தலம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாகுந்தலம் திரைப்படத்திற்கு சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, மணிசர்மா இசையமைத்துள்ளார். வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் வெளியிடும் சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்திய சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வெளிவந்த வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தளபதி விஜயின் திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். முன்னதாக வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய தயாரிப்பாளர்கள் தில் ராஜூ அவர்களின் பேச்சு பெரும் வைரலானது. டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு… ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு… என பேசிய தில் ராஜு தற்போது இதே பாணியில் சமந்தாவின் சாகுந்தலம் பட விழாவில் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களை உற்சாகப்படுத்திய தயாரிப்பாளர் தில் ராஜூ அவர்களின் அந்த வீடியோவை நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரலாகும் அந்த வீடியோ இதோ…