தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் ஆகச்சிறந்த நடிகராகவும் திகழும் நடிகர் தனுஷ் இந்த 2023 ஆம் ஆண்டை வெற்றிகரமாக துவங்கி இருக்கிறார். முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவான வாத்தி (SIR) திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்ற தனுஷின் வாத்தி திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்களான ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் நடித்த The Gray Man மற்றும் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடித்த திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்கள் தனுஷ் நடிப்பில் தயாராகி வருகின்றன. அந்த வகையில், தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். தமிழ் , தெலுங்கு & ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 நவம்பர் 28ஆம் தேதி பூஜையோடு தொடங்கப்பட்டது. இதனிடையே தனது திரைப்பயணத்தில் அடுத்த மைல் கல்லாக தனுஷ் தனது 50வது படத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷின் இந்த 50 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.

1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் “கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்” என குறிப்பிட்டு "விரைவில் மில்லரின் மாபெரும் வருகை!" என பதிவிட்டு, கேப்டன் மில்லர் திரைப்படத்தின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இதோ…