இந்திய சினிமாவின் பெருமை மிகு நடிகராய் உயர்ந்திருக்கும் நடிகர் தனுஷ் அவர்கள் நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. சத்திய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் பிரபல திரைப்படங்களான ‘ராக்கி’, ‘சாணி காகிதம்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் மிகப்பெரிய பொருட்செலவில் இயக்கி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் தனுஷ் அவருடன் இணைந்து சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர், குமரவேல், டேனியல் பாலாஜி, நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

1930 சுதந்திர காலத்தில் நடக்கும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார் பிரபல பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்கி. மேலும் திலீப் சுப்ராயன் சண்டை வடிவமைப்பு செய்ய ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் வெற்றிக் கூட்டனியான ஜி வி பிரகாஷ் குமார் – தனுஷ் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கான பின்னணி இசையில் தற்போது ஜி வி பிரகாஷ் குமார் பணியாற்றி வருவதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது.

பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஆண்டு இந்த படத்திற்கான முதல் கட்ட படபிடிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முடித்து பின் தற்போது இந்த படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக படப்பிடிப்பு தளத்திளுந்து சிறப்பு வீடியோவினை படக்குழு வெளியிட்டது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் சிறப்பு வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது,.

இந்நிலையில் படப்பிடிப்பு நிலவரம் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் டி.ஜே தியாகராஜன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்ட தகவல்,

“கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மும்முரமாக தென்காசி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அருண் மாதேஸ்வரன் நிச்சயமாக பெரிய இயக்குனராக வருவார். தனுஷ் நடிப்பு இதுவரைக்கும் பார்த்திருக்காத அளவு அற்புதமா இருக்கும். முதல் பார்வை கொஞ்சம் தள்ளி தான் வரும். கொஞ்சம் கொஞ்சமா அப்டேட் வந்துட்டுதான் இருக்கும். ஜி வி பிரகாஷ் அசுரன் போன்ற பல படங்களில் அவரது பிண்ணனி இசை சிறப்பாக இருக்கும். இது எங்க படத்துக்காக சொல்லவில்லை. அருண் மாதேஸ்வரன் பிரமாதமா எடுத்துருக்காரு. அந்த காட்சியை பார்த்து ஜிவி பிரகாஷ்க்கு பெரிய சவால இந்த படம் இருக்கும் னு நினைக்கிறார்” என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த தகவல் இணையத்தில் மிகப்பெரிய அளவு வைரலாகி வருகின்றது.

தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வாத்தி திரைப்படம் அவருக்கு மிகபெரிய வரவேற்பை கொடுத்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தனுஷுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் தனுஷுக்கு கேப்டன் மில்லர் திரைப்படமும் அட்டகாசமான வரவேற்பை உலகளவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.