தளபதி விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம ட்ரீட்... லியோ படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்! விவரம் உள்ளே

தளபதி விஜயின் லியோ பட அடுத்த அப்டேட் பற்றி பேசிய தயாரிப்பாளர்,lalith kumar shares next update of thalapathy vijay in leo movie | Galatta

தமிழ் சினிமா நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வாரிசு கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக வெளிவந்த வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து தற்போது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தால் லியோ திரைப்படத்தில் தற்போது தளபதி விஜய் நடித்து வருகிறார் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் இணைந்துள்ள லியோ திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தளபதி விஜயின் 67 வது திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பு கேஷ்மீரில் நடைபெற்றது தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு மேல் காஷ்மீரில் நடைபெற்ற இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் ஆகியோருடன் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கலை இயக்குனர் N.சதீஷ்குமாரின் கலை இயக்கத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்ற ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

தளபதி விஜய் அவர்களின் திரை பயணத்தில் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பில் தயாராகி வரும் லியோ திரைப்படத்தின் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் அவர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அடுத்த அப்டேட் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனியார் விருது விழா ஒன்றில் தற்போது கலந்து கொண்ட தயாரிப்பாளர் லலித்குமார் அவர்களிடம் லியோ படத்தின் அப்டேட் குறித்து கேட்டபோது, "லியோ அப்டேட்… இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்னது போல் தான்.. காஷ்மீரில் மிகவும் கஷ்டப்பட்டு படமாக்கினோம். -18 டிகிரி வரையில் இரவில் படப்பிடிப்பு நடத்தினோம். விஜய் சார் அவர்களின் பிறந்த நாளன்று ஏதாவது ஒரு அப்டேட் கொடுக்கலாம் என இருக்கிறோம். ஜூன் 22 ஆம் தேதி ஒரு அப்டேட் வரும்" என தெரிவித்திருக்கிறார். முன்னதாக தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று கட்டாயமாக லியோ திரைப்படத்திலிருந்து ஒரு அப்டேட் கிடைக்கும் என ரசிகர்கள் முன்பே எதிர்பார்த்திருந்த நிலையில் அதனை தற்போது தயாரிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இத LIFE LONG என் மண்டைல போட்டு திரிய முடியாதுல... திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திவ்யா கணேஷ்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

இத LIFE LONG என் மண்டைல போட்டு திரிய முடியாதுல... திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திவ்யா கணேஷ்! ட்ரெண்டிங் வீடியோ

HUG பண்ணகூடாது.. சண்டை போடக்கூடாது... தனது செல்ல மகனின் CUTE-ஆன கோவம் குறித்து பேசிய மைனா நந்தினி! வைரல் வீடியோ
சினிமா

HUG பண்ணகூடாது.. சண்டை போடக்கூடாது... தனது செல்ல மகனின் CUTE-ஆன கோவம் குறித்து பேசிய மைனா நந்தினி! வைரல் வீடியோ

பொன்னியின் செல்வன் 2 படம் வசூலிக்கவுள்ள பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் இத்தனை கோடியா..? மனம்திறந்த இயக்குனரும் நடிகருமான முன்னணி பிரபலம்!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 படம் வசூலிக்கவுள்ள பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் இத்தனை கோடியா..? மனம்திறந்த இயக்குனரும் நடிகருமான முன்னணி பிரபலம்!