'த்ரிஷாவை இப்படி தான் கூப்பிடுவேன்!'- பொன்னியின் செல்வனில் பணியாற்றிய சுவாரஸ்யங்கள் பகிர்ந்த சோபிதா துலிபலா! வைரல் வீடியோ

பொன்னியின் செல்வனில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்த சோபிதா துலிபலா,sobitha dulipala calls trisha as akka even outside ponniyin selvan 2 | Galatta

தமிழில் மிகச் சிறந்த வரலாற்று புனைவு நாவல்களில் ஒன்றாக திகழும் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான,ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் பாகம் 1 கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆன நிலையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட பொன்னியின் செல்வன் பாகம் 2 வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய நடிகை சோபிதா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவரிடம் நீங்கள் த்ரிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள் அதே மாதிரி ஐஸ்வர்யா ராய் உடனும் நெருக்கமாக இருக்கிறீர்கள். பொன்னியின் செல்வன் படத்தின் இந்த பெண்களின் கேங் எப்படி இருந்தது என கேட்டபோது, 

"பெண்கள் கேங் என்று சொல்லும்போது… ஐஸ்வர்யா ராய் மேடம் உடன் எனக்கு காட்சிகள் இல்லை. ஆனால் எப்போது அவரைப் பார்த்தாலும் அவர் மிகவும் அற்புதமானவராக இருப்பார். அழகு நிறைந்தவராக, அன்பு நிறைந்தவராக, அவரிடம் ஒரு வெதுவெதுப்பு இருக்கும்... த்ரிஷா அவர்களைப் பற்றிய சொல்லும் போது அவரை இப்போதும் அக்கா என்று தான் கூப்பிடுகிறேன் வெளியிலும் கூட... நான் அவரை மிகவும் மதிக்கிறேன். மிகவும் சுதந்திர மனப்பான்மையோடு இருப்பவர். அவர் தான் எப்போதும் பாராட்டுவதில் முதல் ஆளாக இருப்பார். எதையும் கணக்கு போட்டு பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். அந்த தருணத்தை வாழ்வார். அது மிகவும் அழகான விஷயம். என்னுடைய அதிகப்படியான காட்சிகள் குந்தவை மற்றும் பொன்னியின் செல்வன் உடன் தான் இருந்தது. ரவி சார் மிகவும் நகைச்சுவைத்தன்மை வாய்ந்தவர். இந்த நடிகர்களோடு இருந்தது மிகவும் நல்ல தருணங்களாக எனக்கு இருந்தது. இவர்களோடு இருக்கும்போது ஒரு நல்ல எனர்ஜி இருக்கும். இது மாதிரியான ஒரு அழகான படைப்பில் அட்டகாசமான ஒரு இயக்குனரோடு பணியாற்றுவது எனக்கு ஒரு கனவு படம் போன்றது" என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட சோபிதாவின் அந்த முழு பேட்டி இதோ…
 

சினிமா

"FLIGHT-ல பின்னாடி கை வெச்சான்.. சப் சப்னு 4 அடி"!- மோசமான அனுபவத்தில் அடைந்த அதீத கோபம்... திவ்யா கணேஷின் அதிரடி பேட்டி! வீடியோ இதோ

இத LIFE LONG என் மண்டைல போட்டு திரிய முடியாதுல... திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திவ்யா கணேஷ்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

இத LIFE LONG என் மண்டைல போட்டு திரிய முடியாதுல... திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திவ்யா கணேஷ்! ட்ரெண்டிங் வீடியோ

HUG பண்ணகூடாது.. சண்டை போடக்கூடாது... தனது செல்ல மகனின் CUTE-ஆன கோவம் குறித்து பேசிய மைனா நந்தினி! வைரல் வீடியோ
சினிமா

HUG பண்ணகூடாது.. சண்டை போடக்கூடாது... தனது செல்ல மகனின் CUTE-ஆன கோவம் குறித்து பேசிய மைனா நந்தினி! வைரல் வீடியோ