அடம் பிடித்த குழந்தைக்கு வீடியோ கால் செய்த தளபதி விஜய்.. – இணையத்தில் வைரலாகும் Cute Video.. விவரம் இதோ..

பார்க்க விரும்பிய குழந்தைக்கு வீடியோ கால் செய்த தளபதி விஜய் - Thalapathy Cute conversation with Pallavaram Baby | Galatta

இந்திய சினிமாவில் மாஸ் ஹீரோக்களை பட்டியலிட்டால் அதில் முன்னிலை வகிக்கும் ஒரு தமிழ் நடிகர் தளபதி விஜய். கடந்த பல ஆண்டுகளாக விஜய் மாஸ் நட்சத்திரமாக மாறி மிகப்பெரிய ரசிகர் படையினை உருவாக்கி இன்று வசூல் வேட்டை மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அப்படியே ஒரு 10, 15 வருடம் பின்னோக்கி சென்று பார்த்தால் விஜய் மாஸ் காட்சிகளிலும் நய்யாண்டி தனமும் குரும்புததனமும் செய்து குடும்பங்களை குதூகலிக்க வைத்திருப்பார். அனைத்து வயதினரையு திருப்தி படுத்த எண்ணி விஜய் கையிலெடுத்த குறும்புத்தனமான நடிப்பு யாரை கவர்ந்ததோ குழந்தைகளை நன்றாக கவர்ந்தது. முதல் பாதியில் குழந்தைகளுக்கு பிடித்த கதாநாயகன் விஜய் அப்படியே வில்லனை இரண்டாம் பாதியில் பறக்கவிட்டு அந்த குழந்தைக்கு ஹீரோவாகவும் மாறுகிறார்.

2000 ஆண்டிலிருந்து விஜயின் துறுதுறு நடிப்பு ஜனரஞ்சகமான பார்வையாளர்களை அதிகம் கவர்ந்திழுத்தது. ஒவ்வொரு வீட்டு குழந்தைகளும் விஜயை தங்கள் தனிப்பட்ட வாழ்வின் நண்பனாகவும் அண்ணனாகவும் பார்த்து வளர்ந்தனர். காலம் கடந்து விஜய் மிகப்பெரிய மாஸ் ஹீரோ பட்டியலில் இணைந்து உச்சபட்ச நட்சத்திரமாக மாறினார். இருந்தாலும் அவர் படங்களில் குழந்தைகளை உற்சாகப் படுத்தவும் அவர்களுக்கு தன்னை ஒரு ஹீரோவாகவும் இணைத்து கொள்ள சம காலவிஜய் படங்களில் ஏதோ ஒரு குழந்தை சம்மந்தப் பட்ட காட்சியினை இணைத்திருப்பார். உதாரணமாக மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாதி முழுக்க குழந்தைகளுடன் விஜய் உலா வரும் காட்சியினை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் அதே படத்தில் குட்டி ஸ்டோரி குழந்தைகளுடன் நடனமாடுவது. பீஸ்ட் திரைப்படத்தில் ‘குழந்தை அழுவுறா மாதிரி’ கேட்குது என்று குழந்தையை காப்பாற்ற கோடாரியுடன் சூப்பர் ஹீரோவை போல் என்ட்ரி கொடுத்திருப்பார்.

இது போன்ற படங்கள் ஏராளம். அதன்படியே விஜய் தன் ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பங்கள் குழந்தைகள் என ஜனரஞ்சக கலைஞனாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். இதனாலே குழந்தைகளுக்கு விஜய் என்றால் தனி பிரியம் அதன்படி சென்னை பல்லாவரம் சேர்ந்த ஒரு குழந்தை “என்ன விஜய் அங்கிள்  பார்க்க வரமாட்டீங்களா?” என்று அழுது அடம் பிடித்தது இதனை குழந்தையின் பெற்றோர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்கள்.

சற்றுமுன்.!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை சில நாட்களுக்கு முன்பு தளபதி @actorvijay அவர்களை என்னைப் பார்க்க வருமாறு இணையத்தில் வைரலான வீடியோவை உடனடியாக தளபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று அக்குழந்தையிடமும் மற்றும் அவரது… pic.twitter.com/gAkUIlmpQ9

— Bussy Anand (@BussyAnand) March 31, 2023

இணையத்தில் தீயாய் பரவிய வீடியோ தளபதி விஜய் பார்வைக்கு எட்டியுள்ளது. இதனையடுத்து குழந்தைக்கு வீடியோ கால் செய்து நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் விஜய் ரசிகர்களால் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்..

“சேது ணா நீங்க இல்லாம தமிழ் சினிமா இல்லை..“ விடுதலை படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர் – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“சேது ணா நீங்க இல்லாம தமிழ் சினிமா இல்லை..“ விடுதலை படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர் – வைரலாகும் பதிவு இதோ..

“இளையராஜா சார் பாடுவியா னு கேட்டார்..” விடுதலை பட நடிகை பவானி ஸ்ரீ.. -  சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ..
சினிமா

“இளையராஜா சார் பாடுவியா னு கேட்டார்..” விடுதலை பட நடிகை பவானி ஸ்ரீ.. - சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ..

சினிமா

"ஹேக் செய்தவர்களுக்கு நன்றி..!" இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்த அழகான புகைப்படம்.. - வைரலாகும் பதிவு இதோ..