“மல்லிகா.. மல்லிகா” சமந்தாவின் சாகுந்தலம் பட பாடல் வெளியானது – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..

சாகுந்தலம் படத்தின் பாடலின் வீடியோவை வெளியிட்ட படக்குழு வைரல் பாடல் இதோ - Samantha Shakuntalam new video song out now | Galatta

உடல் ரீதியாவும் மன ரீதியாகபவும் தனிப்பட்ட பல பிரச்சனைகளை கொண்டாலும் விடா முயற்சியினாலும் அதீத தன்னமபிக்கையினாலும் பல லட்ச ரசிகர்களுக்கு ஊக்கமாக இருப்பவர் நடிகை சமந்தா. தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருந்த சமந்தா தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். மேலும் நிறைய தடைகள் இருந்தாலும் தொடர்ந்து அட்டகாசமான கதைகளை தேர்தெடுத்து வித்யாசமான படங்களையும் கொடுத்து வருகிறார். அதன்படி கடந்த ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் தெலுங்கில் அதிரடி ஆக்ஷன் கதைக்களமான யசோதா படத்திலும் நடித்து கவனம் பெற்றார். தற்போது சமந்தா மீண்டும் பாலிவுட்டில் ஆக்ஷன் இணைய தொடரில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா விற்கு கதாநாயகியாக குஷி படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சமந்தா நடிப்பில் உருவான பிரம்மாண்ட திரைப்படமான சாகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி 3D தொழில்நுட்பத்தில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது

இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் சமந்தாவின் சாகுந்தலம் படத்தில் இடம் பெற்றுள்ள மல்லிகா மல்லிகா பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது தோழிகளுடன் காதலை எண்ணி சாகுந்தலம் பாடும் இந்த பாடலை மணிஷர்மா இசையில் தமிழில் இந்த பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார் பிரபல பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ளார். இப்பாடலை ரம்யா பெஹரா பாடியுள்ளார். சமந்தாவின் அட்டகாசமான தோற்றத்துடன் வெளியாகிருக்கும் இந்த பாடலின் வீடியோவை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மகாகவி காளிதாசர் எழுதிய புரானகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக கொண்டு சரித்திர கதையாக படமாக்கபட்டுள்ள இந்த படத்தை ‘ருத்ரமாதேவி’ படத்தின் இயக்குனர் குணசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

“இளையராஜா சார் பாடுவியா னு கேட்டார்..” விடுதலை பட நடிகை பவானி ஸ்ரீ.. -  சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ..
சினிமா

“இளையராஜா சார் பாடுவியா னு கேட்டார்..” விடுதலை பட நடிகை பவானி ஸ்ரீ.. - சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ..

சினிமா

"ஹேக் செய்தவர்களுக்கு நன்றி..!" இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்த அழகான புகைப்படம்.. - வைரலாகும் பதிவு இதோ.. 

“இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளனர்” பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளனர்” பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு – வைரலாகும் பதிவு இதோ..