தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. 90 களில் அறிமுகமாகி இளைஞர்களின் மனம் பறித்த யுவன் இன்று வரை பல லட்சக்கணக்கான இளைஞர்களின் ராக தேவனாகவே இருக்கிறார். பல முக்கிய இசையமைப்பாளர் வரிசையில் இருந்தாலும் யுவன் இசை மட்டும் தனியாக தெரியும் அளவு அவரது பாடல் ஒரு புது வித உணர்வை தரும். சமீப காலமாக யுவன் ஷங்கர் ராஜாவின் முந்தைய கால படங்களின் பாடல் மற்றும் இசையை ரசிகர்கள் இணையத்தில் அதிகளவு ட்ரெண்ட் செய்வது வழக்கம். இந்த கால இளைஞர்கள் யுவன் இசையில் மெய்மறந்து யுவன் இசை ஒரு மறந்து. அது ஒரு போதை என்று புகழ்ந்து வருகின்றனர். ஒரு புறம் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் ஒரு புறம் திரைப்பிரபலங்கள் யுவன் சங்கர் ராஜா இசையயையும் பாடலையும் புகழ்ந்து தள்ளாத நாட்களே இல்லை. அந்த அளவு தனக்கான ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

யுவன் இசையமைப்பது மட்டுமல்லாமல் தன் இசையில் பாடுவதும், மற்ற இசையமைப்பாளர் இசையில் பாடுவதும் வழக்கமாக வைத்திருப்பவர். அந்த வகையில் இளையராஜா தொடங்கி அனிரூத் வரை பல இசையமைப்பாளருக்கு பாடி கொடுத்து வருகிறார். பெரும்பாலும் அவர் குரலில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு வரபிரசாதம் தான், அந்த வகையில் சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா பிக்பாஸ் கவின் நடித்து பிப்ரவரி 10 ம் தேதி வெளியாகவிருக்கும் ‘டாடா’ திரைப்படத்தில் ‘போகாதே’ என்ற பாடலை பாடியுள்ளார். பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டது. ஜென் மார்டின் இசையில் யுவன் பாடிய ‘போகதே’ பாடலை படக்குழு யுவனுக்கு ட்ரிபியூட் செய்யும் வகையில் சிறப்பு வீடியோவாக தயார் செய்து வெளியிட்டு உள்ளது.

வீடியோவை பகிர்ந்த கவின் அதனுடன், "எனது சர்வமும் யுவனே என்ற Folder ல் எனது படத்தின் பாடல் இடம் பெற்றுள்ளது. இது கனவு நினைவானது போல் உள்ளது. இதை சத்தியபடுத்த உறுதுணையாய் நின்றவர்களுக்கு நன்றி.யுவன் சார். இந்த வீடியோ உங்களுக்காக.. ஏதோ எங்களால் முடிந்தது.." என்று குறிப்பிட்டுள்ளார்.

காதல் தோல்வியில் உயிருக்கு போராடும் கவின் டாடா படத்திற்காக யுவன் பாடிய பாடலை கேட்டு உயிர் பிழைத்து கொண்டிருப்பது போன்ற காட்சியமைக்கப்பட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் யுவன் ரசிகர்கள் தற்போது அந்த வீடியோ வை அதிகம் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

குழந்தைக்கு தந்தையாக நடிக்கும் கவினின் டாடா படத்தில் கவினுடன் இணைந்து பிரபல நடிகர் பாக்யராஜ், அபர்ணா தாஸ், ஹரிஷ், வி.டி.வி கணேஷ் மற்றும் பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், முன்னதாக படத்தில் பாடல்கள், டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.