தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்களை வெளியிட்டும் வருகிறது. அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டில் FIR, பீஸ்ட், டான் நெஞ்சுக்கு நீதி, விக்ரம், திருச்சிற்றம்பலம், சர்தார், லவ் டுடே, கட்டா குஸ்தி ஆகிய படங்கள் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகின.

தொடர்ந்து இந்த 2023ம் ஆண்டில், அஜித் குமார் நடித்து சூப்பர் ஹிட்டான துணிவு படத்தை வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் தொடரந்து, வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி தனுஷின் வாத்தி திரைப்படத்தையும் வெளியிடுகிறது. இந்த வரிசையில் அடுத்ததாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் டாடா திரைப்படம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் பிக் பாஸ் போட்டியாளரும் பிரபல நடிகருமான கவின் கதாநாயகனாக நடித்துள்ள டாடா திரைப்படத்தில், அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் கே.பாக்கியராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் ஆகியோர் டாடா படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா திரைப்படத்திற்கு எழில் அரசு.K ஒளிப்பதிவில், கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இந்நிலையில் டாடா திரைப்படத்தின் கலகலப்பான SNEAK PEEK வீடியோ தற்போது வெளியானது. ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ள அந்த வீடியோ இதோ…