இந்தியாவில் மிக பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்லலாம். அதிகப்படியான ரசிகர்களை கொண்டுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியில் 16 சீசன்களை கடந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் உலகநாயகன் கமல் ஹாசனை வைத்து தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற தென்னிந்தியா முழுவதும் மிகப்பெரிய நட்சத்திரங்களை வைத்து பிரம்மாண்டமாய் தொடங்கப்பட்டது. லட்சக் கணக்கான ரசிகர்களை கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் 6 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புது புது டாஸ்க்களுடன் விளையாட்டு நிகழ்ச்சியாக நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் நூறு நாட்கள் உள்ளிருந்து செய்யும் செயல்பாடுகளுக்கே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. போட்டியாளர்களுக்கு ரசிகர் மன்றம் தொடங்கும் அளவு இந்த நிகழ்ச்சி மிக பிரபலமானது.

இதில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய சர்ச்சை உருவாக்கி அதே நேரத்தில் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியவர் பாலாஜி முருகதாஸ். விஜய் தொலைகாட்சியில் பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக போட்டியிட்ட பாலா எபிசோடுக்கு எபிசோடு சர்ச்சையை கிளப்பி அதிகளவு பேசப்பட்டவர். அதே நேரத்தில் போட்டியிலும் தீவிரமாக விளையாடக் கூடியவரும் கூட. இதனாலே இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது. பிரச்சனையை உருவாக்கினாலும் சிறப்பான போட்டியை வெளிபடுத்திக்கு இறுதி சுற்றுக்கு முன்னேறிய பாலாஜி முருகதாஸ் தோல்வியை சந்தித்து இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக்பாஸ் 4 கோப்பையை நழுவ விட்டாலும் இணையத்தில் நடைபெற்ற பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மீண்டும் போட்டியாளராக களமிறங்கி டைட்டிலை தட்டி சென்றார்.

பிரபல மாடலாகவும் பல விருதுகளை வென்ற ஆனழகனாகவும் இருக்கும் பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் நிகழ்சிக்கு பின் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இவர் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அவ்வப்போது கருத்துகளை பதிவிடுவார். அதன்படி பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சனிக்கிழமை மாலை, “அன்பிற்குரிய முதல்வர் அவர்களே தயவு செய்து டாஸ்மாக்களை மூடுங்கள்.. ஆன்லைன் ரம்மியை விட குடி நிறைய குடும்பங்களை அழிக்கிறது” என்று பதிவிட்டார்.

இந்திய நாட்டில் தமிழ் நாடு உட்பட ஆன்லைன் ரம்மியினால் பல உயிர்கள் பலியாகின்றது. நிறைய குடும்பங்களின் வரவுகள் இழக்கபடுகின்றது. இந்த ஆன்லைன் ரம்மியினை ஒழிக்க தற்போது பல மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

There are more Orphans in TN like me.
Who lost their family to alcohol.
Don’t pull me into politics.
You can’t handle .

— Balaji Murugadoss (@OfficialBalaji) March 25, 2023

பின் பாலாஜி முருகதார் அதே பதிவில் மறுநாள் அதிகாலையில், “குடியால் ஆதரவற்று நிற்பவர்கள் அதிகம் என்னை போலவே.. என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள் உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது” என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து பலர் அவரது கருத்துகளை விமர்சித்தும் வரவேற்றும் வருகின்றனர். மேலும் பாலாஜி முருகதாஸ் பீர் பாட்டிலுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவையும் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. தற்போது பாலாஜி முருகதாஸ் பதிவுடன் ரசிகர்களின் விமர்சன ட்ரோல்களும் வைரலாகி வருகிறது.