“அக நக பாடல் இப்படிதான் உருவானது” பின்னணி பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – சிறப்பு நேர்காணல் இதோ..

அகநக பாடல் உருவனவிதம் குறித்து பின்னணி பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன் Singer Shakthisree Gopalan about aga naga song | Galatta

தமிழில் இந்த ஆண்டு உலக மேடைகளை அங்கீகரிக்க கூடிய அளவு திரைக்கு வரவிருக்கும் மிக பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம். மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன். அதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது நடிகர்கள் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, பிரபு, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன் மற்றும் நாசர் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே மிகப்பெரிய அளவு கதாபாத்திர அளவு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வைத்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து வரும் ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் உலகெங்கும் வெளியாகவுள்ளது.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின்  வெளியீட்டையொட்டி விளம்பர வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க வரும் மார்ச மாதம் 29ம் தேதி இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. முன்னதாக முதல் பாகத்தில் சிறு பகுதியாக இடம் பெற்று ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ‘அகநக பாடலின் முழு பாடல் வெளியாகி தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது இந்நிலையில் இப்பாடலை பாடிய ஷக்தி ஸ்ரீ கோபாலன் அவர்கள் நமது கலாட்டா மீடியா சிறப்பு பேட்டியில் பாடல் குறித்து பல சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் பேசிய அவர், "அக நக முழு பாடலும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாவதற்கு முன்பே முழு பாடலுக்கான பதிவு செஞ்சி முடிச்சிட்டோம். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ரொம்ப அழகான காட்சியில் பிண்ணனி இசையாக அந்த பாடலின் சின்ன பகுதியை வைப்பார் என்று எனக்கு தெரியாது.  அந்த அற்புதமான நிகழ்வில் என் குரல் இருக்கும் னு நான் எதிர்பார்க்கவில்லை. அந்த சிறு பகுதியை வைத்த பின் அனைத்து மொழியிலும் அந்த சிறு பகுதியை பாடுவதற்கான பாக்யம் எனக்கு கிடைத்தது.‌ நான் முதல் முதலில் திரையரங்கில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் பார்க்கும் போதுதான் எனக்கு தெரிந்தது." என்றார்.

ஏ ஆர் ரகுமான் இசையில் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இந்த பாடல் வந்திய தேவன் மற்றும் குந்தவை இடையே வரும் காதல் பாடலாக படத்தில் இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தின் பாடலை போலவே இரண்டாம் பாகத்தின் பாடலும் மிகப்பெரிய அளவு வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.

மேலும் பின்னணி பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோவை காண .. 

தீ பறக்க நடனமாடும் சாயிஷா.. ஏ ஆர் ரகுமான் இசையில் Vibe செய்யும் ரசிகர்கள் – வெளியானது 'பத்து தல' படத்தின் ‘ராவடி’ வீடியோ சாங்..
சினிமா

தீ பறக்க நடனமாடும் சாயிஷா.. ஏ ஆர் ரகுமான் இசையில் Vibe செய்யும் ரசிகர்கள் – வெளியானது 'பத்து தல' படத்தின் ‘ராவடி’ வீடியோ சாங்..

தனுஷ் உடன் கைகோர்க்கும் இயக்குனர் எச் வினோத் .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான அறிவிப்பு இதோ..
சினிமா

தனுஷ் உடன் கைகோர்க்கும் இயக்குனர் எச் வினோத் .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான அறிவிப்பு இதோ..

“தேவையில்லாத கேள்வி இது..” AK 62 படம் குறித்த கேள்விக்கு விக்னேஷ் சிவன் பதில்..  முழு விவரம் இதோ..
சினிமா

“தேவையில்லாத கேள்வி இது..” AK 62 படம் குறித்த கேள்விக்கு விக்னேஷ் சிவன் பதில்.. முழு விவரம் இதோ..