தனக்கென தனி பாணியில் ரசிகர்கள் விரும்பும் மாஸான படங்களில் நடித்து மக்களின் இதயங்களில் இடம் பிடித்த அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து வெளிவரும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பில் ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் அடுத்ததாக அஜித்குமார் நடிப்பில் வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் துணிவு.

முன்னதாக வெளிவந்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வேலுக்குட்டி படத்துக்கு செய்துள்ள துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அஜித்குமார் உடன் இணைந்து பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ள துணிவு திரைப்படத்தில் சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கன், பிக் பாஸ் பாவணி, அமீர் உள்ளிட்ட பலர் முக்கிய இடங்களில் நடித்துள்ள துணிவு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற பொங்கல் வெளியீடாக அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இதனிடையே ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அஜித் குமாரின் துணிவு பட சில்லா சில்லா பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீஸாகி ரசிகர் உடைய மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இப்பாடலை ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் பாடியிருந்தார். தொடர்ந்து வெளியான துணிவு படத்தின் காசேதான் கடவுளடா பாடலும் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் முதல் பாடலாக வெளிவந்த சில்லா ஜில்லா பாடல் Youtube-ல் டாப் மியூசிக் வீடியோவாக உலக அளவில் முதல் இடத்தை பிடித்து அசத்தலான சாதனை படைத்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அந்த அறிவிப்பு இதோ…