ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் இந்த 2023 பொங்கலை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்க காரணம் அஜித் குமாரின் துணிவு மற்றும் தளபதி விஜயின் வாரிசு படங்களின் ரிலீஸ் தான். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் துணிவு. 

போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்திற்கு விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, ஜான் கொக்கென், சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸாகிறது. முன்னதாக துணிவு படத்தின் முதல் பாடலாக ராக்ஸ்டார் அனிருத் குரலில் வெளிவந்த சில்லா சில்லா பாடல் வைரல் ஹிட்டான நிலையில், இரண்டாவது பாடலாக வெளிவந்த காசேதான் கடவுளடா பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் மூன்றாவது பாடலாக கேங்ஸ்டா பாடல் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் அதிரடியான இந்த கேங்ஸ்டா பாடலின் பக்கா மாஸ் பாடல் வரிகளையும் வெளியிட்டுள்ளனர். அந்தப் பக்கா மாஸ் பதிவு இதோ…